மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 6 மே 2021

கிச்சன் கீர்த்தனா: ரம்ஜான் ஸ்பெஷல்: ரஸ்க் அல்வா

கிச்சன் கீர்த்தனா: ரம்ஜான் ஸ்பெஷல்: ரஸ்க் அல்வா

இஸ்லாமியர்களின் பண்டிகை உணவான இந்த ரஸ்க் அல்வா, இப்போது பல்வேறு விருந்துகளில் பரிமாறப்படுகிறது. மெதுவாக செரிமானமாகும் உணவுகளை நோன்புக் காலத்தில் சேர்த்துக்கொள்ளும் இஸ்லாமியர்கள், இந்த ரஸ்க் அல்வாவை அவ்வப்போது செய்து ருசிப்பார்கள். நாமும் செய்து வீட்டிலுள்ளவர்களுக்கு விருந்து படைக்கலாம்.

என்ன தேவை?

ரஸ்க் – 20 துண்டுகள்

நெய் - 200 கிராம்

முந்திரிப்பருப்பு - 10

உலர் திராட்சை – 10

காய்ச்சிய பால் – ஒன்றரை கப்

சர்க்கரை – ஒரு சிறிய கப்

ஏலக்காய்த்தூள் - சிறிதளவு

எப்படிச் செய்வது?

ரஸ்க்கைச் சிறிது சிறிதாக உடைத்துக் கொள்ளவும். பின்பு இவற்றை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். மிதமான தீயில் கடாயை வைத்து சிறிது நெய் ஊற்றி முந்திரிப்பருப்பு மற்றும் உலர் திராட்சையைப் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். பின்னர் அதே கடாயில் ரஸ்க் பொடியைச் சேர்த்துப் பொன்னிறமாக வறுக்கவும். பிறகு அதில் பாலைச் சேர்த்து ரஸ்க், பாலோடு கலந்து கெட்டியாகும்வரை கிளறவும். பின்னர் இதோடு சர்க்கரை சேர்த்து அது கரையும்வரை நன்கு கிளறவும். சர்க்கரை நன்கு கரைந்ததும் மீதமிருக்கும் நெய்யை ஒவ்வொரு ஸ்பூனாகச் சேர்த்துச் சேர்த்து நன்கு கிளறவும். பின்னர் இந்தக் கலவை வாணலியில் ஒட்டாமல் திரண்டுவரும்போது ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும். பின்னர் இதனுடன் வறுத்த முந்திரிப்பருப்பு மற்றும் உலர் திராட்சையைச் சேர்த்தால் சுவையான ரஸ்க் அல்வா தயார்.

குறிப்பு:

ரஸ்க்கைப் பொடித்த பிறகு அது கப்பில் எவ்வளவு அளவு இருக்கிறதோ அதற்கேற்ப பால் எடுத்துக்கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு ஒரு கப் பொடித்த ரஸ்க்குக்கு ஒன்றரை கப் பால் சேர்க்க வேண்டும்.

நேற்றைய ரெசிப்பி: ரம்ஜான் ஸ்பெஷல் - நெய் சாதம்

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

வியாழன் 6 மே 2021