மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 5 மே 2021

இரண்டு மாதங்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசம்: அரவிந்த் கெஜ்ரிவால்

இரண்டு மாதங்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசம்: அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இரண்டு மாதங்களுக்கான ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

டெல்லியில் கொரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து அம்மாநிலத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “டெல்லியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இரண்டு மாதங்களுக்கான ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும். இதன் பொருள், இரண்டு மாதங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளது என்று அர்த்தமல்ல. விரைவில் இயல்பு நிலை திரும்பும்” என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், “இந்த அறிவிப்பின் மூலம் 72 லட்சம் பேர் பயனடைவார்கள். அத்துடன் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்கு தலா 5,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும்” என்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

-ராஜ்

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

சிறப்பு கட்டுரை: கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு! ...

18 நிமிட வாசிப்பு

சிறப்பு கட்டுரை:  கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

புதன் 5 மே 2021