மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 5 மே 2021

நாளை முதல் 50% இருக்கைகளுடன் பேருந்துகள் இயக்கம்!

நாளை முதல் 50% இருக்கைகளுடன் பேருந்துகள் இயக்கம்!

நாளை முதல் சென்னையில் 50 சதவிகித இருக்கைகளுடன் மட்டுமே மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால்,பல்வேறு கட்டங்களாக தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றது. இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரவுள்ளது.

அலுவலகங்களில் 50% பணியாளர்கள், அரசு மற்றும் தனியார் பேருந்து, மெட்ரோ ரயில்களில் 50% பயணிகள், 3 ஆயிரம் சதுர அடி மற்றும் அதற்கு மேற்பட்ட பரப்பு கொண்ட பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க தடை, அனைத்து உணவகங்கள், தேநீர் கடைகளில் மதியம் 12 மணி வரை மட்டுமே பார்சலுக்கு அனுமதி உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வருகின்றன.

இந்நிலையில், நாளை(மே 6) முதல் மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில், 50 சதவிகித இருக்கைகளில் மட்டுமே பயணிகளுக்கு அனுமதி. பயணிகள் உரிய முகக்கவசம் அணிந்து, தனிநபர் இடைவெளியினைப் பின்பற்றி பாதுகாப்பான முறையில் பயணம் செய்ய வேண்டும் என சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் தெறிவித்துள்ளது.

மெட்ரோ ரயில்களிலும் நாளை முதல் 50 சதவிகித இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள். எக்ஸ் குறியீடு உள்ள இருக்கைகளை தவிர்த்து இடைவெளி விட்டு மக்கள் அமர்ந்து பயணிக்க வேண்டும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வினிதா

6-8 வாரங்களில் மூன்றாவது அலை: எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை!

4 நிமிட வாசிப்பு

6-8 வாரங்களில் மூன்றாவது அலை: எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை!

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

சண்டே ஸ்பெஷல்: நெஞ்செரிச்சல், அஜீரணம்... தீர்வு என்ன?

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: நெஞ்செரிச்சல், அஜீரணம்... தீர்வு என்ன?

புதன் 5 மே 2021