மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 5 மே 2021

ரிலாக்ஸ் டைம்: ஆப்பிள் மின்ட் ஜூஸ்

ரிலாக்ஸ் டைம்: ஆப்பிள் மின்ட் ஜூஸ்

கோடையில் ஏற்படும் சக்தியைப் பூர்த்திச் செய்ய கலோரி நிறைந்த இந்த ஜூஸை இரண்டு உணவு வேளைக்கும் இடைப்பட்ட நேரத்தில் குடித்தால், உடனடி புத்துணர்ச்சி பெற முடியும்.

எப்படிச் செய்வது?

இரண்டு ஆப்பிள்கள், இரண்டு நடுத்தர சைஸ் கேரட்டை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். சிறிதளவு புதினா இலைகளை உதிர்த்து, நறுக்கிய துண்டுகளோடு சேர்த்து, தேவையான அளவு தேன், தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து, வடிகட்டி, அருந்தவும்.

சிறப்பு

வைட்டமின் ஏ, சி நிறைவாக உள்ளதால், கண்களுக்கு நல்லது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதில் உள்ள நுண் ஊட்டச்சத்துகள் உடலுக்கு வலு சேர்க்கும். குழந்தைகளுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் ஏற்றது. உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் இருப்பவர்களும் இந்த ஜூஸை அருந்தலாம். பருமனாக இருப்பவர்கள், தேன் சிறிதளவு மட்டும் சேர்த்து அருந்தவும்.

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

4 நிமிட வாசிப்பு

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

புதன் 5 மே 2021