மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 4 மே 2021

பயிர் காப்பீட்டுக்கான காலக்கெடுவை நீட்டிக்கவும்!

பயிர் காப்பீட்டுக்கான காலக்கெடுவை நீட்டிக்கவும்!

பருத்தி பயிர் காப்பீட்டுக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று, காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடிக்குப் பிறகு கோடைப் பயிராக பருத்தி, உளுந்து, எள், நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படும். திருவாரூர் மாவட்டத்தில் குறைவான பரப்பிலேயே பருத்தி சாகுபடி செய்வர்.

திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு சுமார் 50,000 ஏக்கருக்கு மேல் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கொரடாச்சேரி ஒன்றியத்தில் என்கண், காப்பனாமங்கலம், காவனூர் உள்ளிட்ட இடங்களில் 5,000 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இந்திய அளவில் பயிர் காப்பீட்டு திட்டம் மார்ச் மாதம் 30ஆம் தேதி நிறைவடைந்தது.

ஆனால், தமிழகத்தில் மார்ச் மாதம் முதல் வாரத்தில் நெற்பயிர் அறுவடை நிறைவடையும். அதன் பின்னர் கோடை பயிரான பருத்தி சாகுபடி நடைபெறும். மார்ச் மாதமே பயிர் காப்பீடு நிறைவடைந்ததால் அனைவராலும் பருத்தி சாகுபடிக்கு காப்பீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மாநிலத்தில் அதிகம் சாகுபடி செய்யக்கூடிய பயிருக்கு மத்திய அரசு அனுமதி பெற்று காப்பீடு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருப்பதால் தமிழக அரசு சிறப்பு அனுமதி பெற்று பருத்தி பயிருக்குக் காப்பீடு செய்ய காலகெடுவை நீட்டிக்க வேண்டும் என காவிரி டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட பருத்தி சாகுபடி விவசாயிகள், “பருத்தி சாகுபடி காப்பீடு காலக்கெடுவை நீட்டித்து விவசாயிகளின் அச்சத்தைப் போக்க வேண்டும். மேலும், பருத்தி பயிருக்கு ஒரு ஹெக்டேருக்கு 1,521 ரூபாய் காப்பீட்டுக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்தொகை மிகவும் அதிகம் என்பதால் மத்திய, மாநில அரசுகள் காப்பீடு கட்டணத்தைக் குறைத்து நிர்ணயிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ராஜ்

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

செவ்வாய் 4 மே 2021