மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 மே 2021

மரங்களைப் பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன? உயர் நீதிமன்றம்

மரங்களைப் பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன? உயர் நீதிமன்றம்

வனப்பகுதி அல்லாத இடங்களில் உள்ள மரங்களைப் பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

உணவு மற்றும் சுவாசத்துக்கான காற்று என எண்ணிலடங்கா பல நன்மைகளையும் தருகின்றன மரங்கள். இந்த நிலையில் காடுகளை அழித்தல், மரங்களை வெட்டுதல் என்பது தொடர்கதையாக உள்ளது.

இதனால் மரங்களின் எண்ணிக்கை தற்போது வெகுவாகக் குறைந்து வருகிறது. அதன் காரணமாக சுற்றுச்சூழல் பாதிப்புகள் நிகழக்கூடும் என்பதால், காடுகள் அழிப்பைத் தடுக்கவும், மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அரசு மற்றும் அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில் மரங்களைப் பாதுகாக்க நிபுணர் குழு அமைக்க கோரி ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் கர்நாடகா, டெல்லி, உ.பி, போன்ற மாநிலங்களில் மரங்களைப் பாதுகாக்க சட்டங்கள் உள்ளதாக மனுதாரர் தெரிவித்தார். அதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘வனப்பகுதி அல்லாத இடங்களில் உள்ள மரங்களைப் பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கள் என்ன?’ என்ற கேள்விக்கு உள்துறை செயலாளர், நகராட்சி நிர்வாகத்துறை, பொதுப்பணித்துறை, டிஜிபி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.

-ராஜ்

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

3 நிமிட வாசிப்பு

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

4 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

திங்கள் 3 மே 2021