மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 2 மே 2021

பெட்ரோல், டீசல் விலை உயரும்?

பெட்ரோல், டீசல் விலை உயரும்?

தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் பெட்ரோல், டீசல் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 67 டாலர்கள் என்ற நிலையில் உள்ளபோதும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தேர்தல் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையை அதிக அளவு உயர்த்தாமல் வந்தன. இந்த நிலையில் இன்று (மே 2) தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி டீசல் மற்றும் பெட்ரோல் விலை 2 முதல் 3 ரூபாய் வரை உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வு, இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி ஆகியவை முக்கிய காரணியாக விளங்குகிறது. வரியை குறைக்க பல்வேறு தரப்பில் இருந்து பலமுறை கோரிக்கை எழுந்தபோதும் கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் தற்போதைய சூழலில் மாற்றம் சாத்தியம் இல்லை என்றும் கூறப்பட்டது.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் விலை உயர்த்தும் முடிவை எண்ணெய் நிறுவனங்கள் கைவிடாது என்று கூறப்படும் நிலையில், விலை உயர்வு மே மாதம் முதல் வாரத்தில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த காலங்களிலும் கர்நாடகா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மாநிலத்தில் விலையை உயர்த்தாமல் தேர்தல் முடிவுகள் வெளியானதும் மீண்டும் விலை உயர்வு அறிவிக்கப்பட்டதுபோல், இனிவரும் நாட்களில் விலை உயர்வு நிச்சயம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

-ராஜ்

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

சிறப்பு கட்டுரை: கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு! ...

18 நிமிட வாசிப்பு

சிறப்பு கட்டுரை:  கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

ஞாயிறு 2 மே 2021