மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 2 மே 2021

இந்தியர்களை மீட்க திருச்சியில் இருந்து சிறப்பு விமானம்!

இந்தியர்களை மீட்க திருச்சியில் இருந்து சிறப்பு விமானம்!

ஐக்கிய அரபு நாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்க திருச்சியில் இருந்து சிறப்பு விமானம் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வேகமாகப் பரவி வருவதால், இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு நாடுகளுக்கு இந்தியர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 28ஆம் தேதி முதல் அந்த நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஐக்கிய அரபு நாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்க, அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் திருச்சியில் இருந்து காலியாக சிறப்பு விமானங்களை இயக்கி அந்த நாட்டில் உள்ள இந்தியர்களை இங்கு அழைத்து வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டும் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் காரணமாக வெளிநாடுகளில் சிக்கிய ஆயிரக்கணக்கான இந்தியர்களில் சிலரை திரும்பக் கொண்டுவருவதற்கான இந்தியாவின் மீட்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இரண்டு சிறப்பு விமானங்கள் அபுதாபி மற்றும் துபாயிலிருந்து 363 இந்தியர்களை அழைத்து வந்தன.

-ராஜ்

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

4 நிமிட வாசிப்பு

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

ஞாயிறு 2 மே 2021