மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 2 மே 2021

இந்தியாவிலிருந்து வந்தால் ஐந்து ஆண்டு சிறை!

இந்தியாவிலிருந்து வந்தால் ஐந்து ஆண்டு சிறை!

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருவதால் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்தால் ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. தினசரி பாதிப்பு நான்கு லட்சத்தை நெருங்கிவருகிறது. மேலும் இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறது.

வைரஸ் பாதிப்பு அதிகரிப்பால் பல்வேறு நாடுகள் இந்திய விமானங்களுக்குத் தடை விதித்துள்ளன. ஆஸ்திரேலிய நாடும் இந்திய விமானங்களுக்கு மே 15ஆம் தேதி வரை சமீபத்தில் தடையை அறிவித்தது.

இந்தியாவுடனான நேரடி விமான சேவையை நிறுத்தியது. இதற்கிடையே இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியர்கள் வேறு நாடுகள் வழியாக ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பியது தெரியவந்தது. மேலும், இந்தியாவில் நடந்துவரும் ஐபிஎல் கிரிக்கெட்டில் பங்கேற்று இருந்த ஆஸ்திரேலிய வீரர்கள் மூன்று பேர் தோகா வழியாகத் திரும்பி இருந்தனர்.

இந்த நிலையில் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியக் குடிமக்கள் நாடு திரும்பி வந்தால் ஐந்து ஆண்டு சிறை தண்டனை மற்றும் 66,000 டாலர் அபராதம் விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவு நாளை (ஏப்ரல் 3) முதல் அமலுக்கு வருகிறது. இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் சுகாதார அமைச்சர் கிரெக்ஹன்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் இறப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வரும் பயணிகளைத் தடுப்பதற்காக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து பேசியுள்ள சுகாதாரத்துறை அமைச்சர், “இந்தக் கட்டுப்பாடுகள் நாளை (மே 3) முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்தத் தடையை மீறினால் அபராதம் மற்றும் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். எங்களது இதயங்கள், இந்திய மக்களிடம், நமது இந்திய - ஆஸ்திரேலிய சமூகத்திடமும் இருக்கிறது. இந்த முடிவுகளை அரசாங்கம் எளிதில் எடுக்கவில்லை. ஆஸ்திரேலிய பொது சுகாதாரம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட அமைப்புகளின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கவும், தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா பாதிப்புகளை குறைத்து நிர்வகிக்கவும் உதவும்” என்று கூறியுள்ளார்.

-ராஜ்

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

2 நிமிட வாசிப்பு

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... ...

4 நிமிட வாசிப்பு

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... எதற்காக?

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

ஞாயிறு 2 மே 2021