மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 மே 2021

ஒரு மணி நேரத்துக்கு ஒரு மெட்ரோ; இரண்டு மணி நேரத்துக்கு ஒரு மின்சார ரயில்!

ஒரு மணி நேரத்துக்கு ஒரு மெட்ரோ; இரண்டு மணி நேரத்துக்கு ஒரு மின்சார ரயில்!

மே மாதம் முழுவதும் நாளை (மே 2) முதல் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் மெட்ரோ ரயில் சேவை ஒரு மணி நேரத்துக்கு ஒன்று வீதம் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும் என்றும் முழு ஊரடங்கான ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு மணி நேரத்துக்கு ஒரு சேவை வீதம் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்றும் ரயில்வே துறை அறிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் கொரோனா தொற்றை தடுப்பதற்காக முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அரசின் அறிவுறுத்தலின்படி மெட்ரோ ரயில் சேவைகள் கடந்த 20ஆம் தேதி முதல் மாற்றி அமைக்கப்பட்டது. மேலும், அரசின் ஆணைப்படி மே மாதத்திலும் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் மெட்ரோ ரயில் சேவை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது. விம்கோநகர் - விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவை ஒரு மணி நேர இடைவெளியில் இயக்கப்படும். சென்ட்ரல் - விமான நிலையம் வரை இரண்டு மணி நேர இடைவெளியில் இயக்கப்படும். சென்ட்ரல் - பரங்கிமலை வரை இரண்டு மணிநேர இடைவெளியில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும்.

இந்த நிலையில் முழு ஊரடங்கான நாளை (மே 2) முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு மணி நேரத்துக்கு ஒரு சேவை வீதம் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் நான்கு வழித்தடங்களிலும் குறைந்த அளவில் ரயில்கள் இயக்கப்படுகிறது.

சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்ட்ரல் - சூலூர்பேட்டை, கடற்கரை - செங்கல்பட்டு, கடற்கரை - வேளச்சேரி ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் புறநகர் சிறப்பு ரயில்கள் இனி அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் பின்பற்றப்படும் கால அட்டவணைப்படி இன்று (மே 1) இயக்கப்படும் என்று சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காகவும், அனைத்து பயணிகளின் பாதுகாப்பான பயணத்துக்காகவும் மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழைவதற்கும், ரயில்களில் பயணிப்பதற்கும் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து பயணம் செய்து மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

-ராஜ்

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

சனி 1 மே 2021