மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 மே 2021

கடந்த மூன்று மாதங்களில் தங்கத்தின் விற்பனை 37% அதிகரிப்பு!

கடந்த மூன்று மாதங்களில் தங்கத்தின் விற்பனை 37% அதிகரிப்பு!

ஜனவரி முதல் மார்ச் வரையிலான இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவில் தங்கத்தின் விற்பனை 37 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது.

இந்தியாவில் தங்கத்தின் விற்பனை மற்றும் பயன்பாடு பொருளாதாரத்தில் முக்கிய அம்சமாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டது.

இதனால் தங்கத்தின் விற்பனை சரிந்தது. அடுத்து தங்கத்தின் மீது அதிக முதலீடுகள் குவிந்ததால் விலையும் வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. சில மாதங்கள் கழித்து கட்டுப்பாட்டுகள் தளர்த்தப்பட்டதையடுத்து தங்கம் விற்பனை அதிகரிக்கத் தொடங்கியது.

இந்த நிலையில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவில் தங்கத்தின் விற்பனை 37 சதவிகிதம் அதிகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காலாண்டில் இந்தியாவுக்கு 301 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் இறக்குமதி (83.1 டன்) செய்யப்பட்டதை விட 3.5 மடங்கு அதிகமாகும். நகைக்கடைக்காரர்களின் தேவை அதிகரித்ததால் தங்க இறக்குமதி உயர்ந்தது. ஆனால், தற்போது கொரோனா இரண்டாவது அலை பரவி வருவதால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் தங்கம் விற்பனை மீண்டும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து உலக தங்க கவுன்சிலின் இந்திய பிரிவு இயக்குநர் சோமசுந்தரம், “தற்போதைய சூழலில் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் திருமணங்களுக்காக தங்கத்தின் தேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

அடுத்த எட்டு வாரங்கள் மிகவும் முக்கியமானது. கொரோனா பாதிப்புகள் குறைந்ததும் தடுப்பூசி செலுத்தப்படும் பணி தீவிரமாகும் பட்சத்தில் நுகர்வோர்களின் நம்பிக்கையுடன் தங்கத்தை வாங்குவர்.

இது போன்று நடந்தால் வருகிற மூன்றாவது மற்றும் நான்காவது காலாண்டில் கடந்த ஆண்டைவிட தங்கத்தின் விற்பனை அதிகரிக்கும்” என்று கூறியுள்ளார்.

-ராஜ்

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

5 நிமிட வாசிப்பு

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

சனி 1 மே 2021