மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 மே 2021

சர்வதேச விமானங்களுக்கான தடை மே 31 வரை நீட்டிப்பு!

சர்வதேச விமானங்களுக்கான தடை மே 31 வரை நீட்டிப்பு!

இந்தியாவில் சர்வதேச விமானங்களுக்கான தடை மே 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாகப் பல மாதங்களாக சர்வதேச விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து படிப்படியாக உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து சர்வதேச பயணிகளுக்காகப் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சர்வதேச விமானங்களுக்கான தடை மே 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, அதிகாரிகளால் ஒப்புதல் வழங்கப்பட்டு இயக்கப்படும் சர்வதேச விமானங்களுக்கு இது பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் சூழலில், சிவில் விமான போக்குவரத்து அமைச்சகமும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனினும் சரக்கு விமானங்களுக்கு இத்தகைய கட்டுப்பாடுகள் பொருந்தாது எனவும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

இந்த நிலையில், அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவுடனான விமானப் போக்குவரத்தை ஏற்கெனவே தற்காலிகமாக நிறுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

-ராஜ்

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

சனி 1 மே 2021