மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 மே 2021

நெல்லுக்கு கோணிப்பை இல்லை: கலங்கும் விவசாயிகள்!

நெல்லுக்கு கோணிப்பை இல்லை: கலங்கும் விவசாயிகள்!

‘கோணிப்பை இல்லை’ என்ற ஒரே காரணத்தால், விவசாயிகள் கொண்டு வந்த நெல்லை 27 நாட்களாக எடைபோடாமல் வெளியில் குவித்து வைத்திருக்கும் அவலம், ராணிப்பேட்டை கொள்முதல் நிலையத்தில் நடந்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அருகேயுள்ள தச்சம்பட்டறை கிராமத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டுவருகிறது. தற்சமயம், சொர்ணவாரி பருவத்தில் அறுவடைச் செய்த நெல்லை விற்பனைக்காக விவசாயிகள் இங்கு கொண்டுவந்து இறக்கியுள்ளனர். ஏற்கெனவே 13,515 நெல் மூட்டைகள் இருப்பில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிற சூழலில் விவசாயிகள் கொண்டு வந்த மேலும் 2,000 மூட்டை நெல் எடைபோடாமல் வெளிப்புறத்திலேயே குவித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தச்சம்பட்டறை நெல் கொள்முதல் நிலையம் மூடப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால், அதிர்ச்சியடைந்த விவசாயிகள் சிலர் கொள்முதல் நிலையம் முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“வெளியிலுள்ள எங்களது நெல் குவியலை உடனடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும். கடன்பட்டு உழுது விவசாயம் செய்கிறோம். இப்படி 27 நாள்களாக எடை போடாமல் வெளிப்புறத்திலேயே நெல்லை கொட்டி வைத்திருந்தால் எங்களுக்குத்தானே நஷ்டம். வெப்பச்சலனம் காரணமாக அடிக்கடி மழை பெய்கிறது. நெல்லில் ஈரப்பதம் பிடித்தால் முளைப்புவிடும்.

நெல்லை எடைபோடுமாறு தொடர்ந்து வலியுறுத்தியும் ‘கோணிப்பை இல்லை’ என்றே ஒரே பதிலை திரும்ப திரும்பச் சொல்கிறார்கள். இப்படியே போனால், எங்களின் நெல்லை ரோட்டில் கொட்டி போராட்டம் செய்யவும் தயங்க மாட்டோம்” என்று கோஷம் எழுப்பி மனக்குமுறலை வெளிப்படுத்தினர். விவசாயிகளை சமாதானம் செய்ய கொள்முதல் நிலையம் தரப்பில் ஒருவர்கூட வந்து பேசவில்லை. இதனால், வேதனையுடன் அவர்கள் கலைந்து சென்றனர்.

அதேநேரம், “ராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டும் 84 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு கொள்முதல் செய்யப்படும் நெல் உடனடியாக குடோனுக்கு அனுப்பி வைக்கப்படுவதில்லை. இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகமும், சிவில் சப்ளை நிர்வாகமும் மிக அலட்சியமாக இருக்கிறது. தொடர்ந்து இரண்டு நாட்கள் (மே 1, 2) விடுமுறை என்பதால் அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் அடுத்த வாரத்திலிருந்தே நெல் கொள்முதல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் ஆணையமும் கெடுபிடி காட்டுகிறது. மொத்தத்தில் விவசாயிகளையே அனைவரும் வஞ்சிக்கிறார்கள்” என்று கண் கலங்குகிறார்கள் ராணிப்பேட்டை விவசாயிகள்.

-ராஜ்

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

சனி 1 மே 2021