மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 மே 2021

திருச்சி பாஸ்போர்ட் சேவை மையம் மூடல்!

திருச்சி பாஸ்போர்ட் சேவை மையம் மூடல்!

இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகம் வழிகாட்டுதலின்படி, நாடு முழுவதும் செயல்பட்டு வரும் பாஸ்போர்ட் சேவை மையங்கள் நேற்று (ஏப்ரல் 30) முதல் வருகிற 14ஆம் தேதி வரை மூடப்படுகிறது.

அதன்படி திருச்சியில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையம் செயல்படாது. இந்த நாட்களில் பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு வருவதற்கு ஏற்கனவே முன்பதிவு செய்து விண்ணப்பதாரர்களின், முன்பதிவு தேதி பிறகு மாற்றி அமைக்கப்படும்.

மேலும், பாஸ்போர்ட் விண்ணப்பத்தின் தற்போதைய நிலை, போலீஸ் சரிபார்ப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கு இலவச தொலைபேசி எண் 1800-258-1800, தொலைபேசி எண்கள் 0431-2707203, 2707404 மற்றும் வாட்ஸ்அப் எண் 7598507203 அல்லது இ-மெயில் [email protected] ஆகியவை மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதேபோல் தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையங்களும் செயல்படாது என்று தெரிகிறது. இதை ஆன்லைனில் உறுதி செய்துகொள்ளலாம்.

-ராஜ்

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

சிறப்பு கட்டுரை: கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு! ...

18 நிமிட வாசிப்பு

சிறப்பு கட்டுரை:  கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

சனி 1 மே 2021