மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 மே 2021

கிச்சன் கீர்த்தனா: முருங்கையிலை ஃப்ரைடு ரைஸ்

கிச்சன் கீர்த்தனா: முருங்கையிலை ஃப்ரைடு ரைஸ்

வளரும் நாடுகளில் முருங்கையிலை ஊட்டச்சத்து உணவாகப் பரிந்துரைக்கப்படுகிறது. முருங்கையிலையில் வைட்டமின்கள் பி, சி, கே, பீட்டா கரோட்டின், மாங்கனீஸ் மற்றும் புரதச்சத்துகள் நிறைந்துள்ளன. முருங்கைக்கீரைக்கு ரத்தத்தைச் சுத்திகரிக்கும் பண்பு உண்டு. அப்படிப்பட்ட முருங்கையிலைக்கொண்டு குழந்தைகளுக்குப் பிடித்த ஃப்ரைடு ரைஸ் செய்து அசத்தலாம்.

என்ன தேவை?

சாதம் - 2 கப்

முருங்கையிலை - ஒரு கப்

பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப்

பொடியாக நறுக்கிய கேரட் - கால் கப்

பொடியாக நறுக்கிய குடமிளகாய் - அரை கப்

கிரீன் சில்லி சாஸ் - 2 டேபிள்ஸ்பூன்

சோயா சாஸ் - 2 டேபிள்ஸ்பூன்

டொமேட்டோ கெட்சப் - ஒரு டேபிள்ஸ்பூன்

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

எப்படி செய்வது?

பானில் (Pan) எண்ணெய்விட்டு, நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு கேரட் சேர்த்து, சிறிதளவு உப்பு தூவி கேரட் மிருதுவாகும் வரை வதக்கவும். இதனுடன் முருங்கையிலையைச் சேர்த்துக் கிளறி சில நிமிடங்கள் வேகவிடவும். பின்னர் நறுக்கிய குடமிளகாய், சோயா சாஸ், கிரீன் சில்லி சாஸ், டொமேட்டொ கெட்சப் சேர்த்துக் கலக்கவும். காய்கறிகள் நன்கு வெந்தவுடன் சாதம், சிறிதளவு உப்பு சேர்க்கவும். அனைத்துப் பொருள்களும் ஒன்று சேரும் விதத்தில் லேசாக டாஸ் செய்யவும். முருங்கையிலை ஃப்ரைடு ரைஸ் தயார்.

நேற்றைய ரெசிப்பி: முருங்கையிலை ராகி ரொட்டி

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

சனி 1 மே 2021