மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 ஏப் 2021

கொரோனா நோயாளிகள் 3,000 பேர் எஸ்கேப்!

கொரோனா நோயாளிகள் 3,000 பேர் எஸ்கேப்!

கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் கொரோனா நோயாளிகள் 3,000 பேர் தலைமறைவாகியுள்ளதால், ‘கொரோனா பாதிப்பு உறுதியானவர்கள் தயவுசெய்து மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள். தலைமறைவாகிவிடுவது சரியான நடவடிக்கை அல்ல’ என்று கர்நாடக அமைச்சர் ஆர்.அசோக் கூறியுள்ளார்.

கர்நாடகத்தில் கொரோனா தனது இரண்டாவது அலையை வீச தொடங்கி உள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதிப்பும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் தினந்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த, கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க சுகாதாரத்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் கொரோனா பரிசோதனை செய்ய இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரயில், பஸ் நிலையங்கள் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. சாலையில் நடந்து செல்பவர்களை பிடித்து வலுக்கட்டாயமாக கொரோனா பரிசோதனையும் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுபவர்கள் தங்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானால் தனிமைப்படுத்தி விடுவார்கள் என்ற பயத்தில் பெயர், செல்போன் எண்களை மாற்றி கொடுக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

இந்த நிலையில் பெங்களூரில் கொரோனா நோயாளிகள் 3,000 பேர் தலைமறைவாக உள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோக் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் பெங்களூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. பெங்களூரில் கொரோனா பரிசோதனை முடிவுகள் அவரவர்களின் செல்போன்களுக்கு குறுந்தகவலாக அனுப்பப்படுகிறது. இதில் கொரோனா பாதிப்பு உறுதியான நோயாளிகள் சுமார் 3,000 பேர் தலைமறைவாகிவிட்டனர். அவர்கள் தங்களின் வீடுகளை காலி செய்துவிட்டு சென்றுவிட்டனர். அவர்களைத் தேடி கண்டுபிடிப்பது பெரும் சவாலான ஒன்று. அவர்கள் தங்களின் செல்போனை அணைத்து வைத்துள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் போலீசார் மூலமும் அவர்களை தேடி கண்டுபிடிப்பது கடினம். கொரோனா பாதிப்பு உறுதியானவர்கள் தயவு செய்து மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள். இவ்வாறு தலைமறைவாகிவிடுவது சரியான நடவடிக்கை அல்ல” என்று கூறியுள்ளார்.

மேலும், “அவர்கள் தங்களுக்கு உடல்நிலை மோசமாகும்போது தான் செல்போனை இயங்குநிலையில் வைக்கிறார்கள். இவ்வாறு செய்தால் எப்படி சிகிச்சை அளிப்பது என்பதை யோசித்து பாருங்கள். இவ்வாறு தலைமறைவு ஆவதால் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கும். கொரோனா பாதிப்பு உறுதியானவர்கள் யாரும் தயவு செய்து செல்போன்களை அணைத்து வைக்க வேண்டாம் என்று கைகூப்பி கேட்டுக் கொள்கிறேன். கர்நாடகத்தில் தற்போதைக்கு 14 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளோம். கொரோனா கட்டுக்குள் வந்தால் ஊரடங்கை நீட்டிக்கும் நிலை இருக்காது” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

பெங்களூரில் கொரோனா நோயாளிகள் 3,000 பேர் தலைமறைவாகி உள்ளது கர்நாடகத்தில் மட்டுமல்ல; அவர்கள் தொற்றுடன் மறைந்துள்ள பல பகுதிகளிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-ராஜ்

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

வெள்ளி 30 ஏப் 2021