மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 ஏப் 2021

இந்தியாவுக்குச் செல்ல வேண்டாம்: அமெரிக்கா

இந்தியாவுக்குச் செல்ல வேண்டாம்: அமெரிக்கா

அமெரிக்கர்கள் யாரும் இந்தியாவுக்குச் செல்ல வேண்டாம். இந்தியாவில் இருந்து எவ்வளவு சீக்கிரம் கிளம்ப முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கிளம்பி அமெரிக்கா வந்துவிடுங்கள் என்று தன் நாட்டு மக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் நடப்பு ஆண்டு ஏப்ரல் தொடக்கத்தில் இருந்து நாள்தோறும் கொரோனா பாதிப்புகள் புதிய உச்சம் தொட்டு வருகின்றன. கடந்த 5ஆம் தேதி ஒரே நாளில் 1 லட்சத்து 30,249 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இதன்பின்னர் இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து நாளொன்றுக்கு 3 லட்சத்துக்கும் கூடுதலான பாதிப்புகளைப் பதிவு செய்து வருகிறது.

இதைக் கவனத்தில்கொண்டு அமெரிக்க அரசு தனது நாட்டு குடிமக்களுக்கு பயண கால எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘இந்தியாவுக்கு அமெரிக்கர்கள் யாரும் பயணம் செய்ய வேண்டாம். இந்தியாவில் இருந்து எவ்வளவு சீக்கிரம் கிளம்ப முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கிளம்பி அமெரிக்கா வந்துவிடுங்கள்’ எனத் தெரிவித்துள்ளது.

மேலும், இந்தியாவில் மருத்துவ உதவி பெறுவது கடுமையாக உள்ளது. வரைமுறைக்கு உட்பட்டே சிகிச்சை கிடைத்து வருகிறது. அதனால் கிடைக்கும் போக்குவரத்து வசதிகளைக் கொண்டு உடனடியாக இந்தியாவை விட்டு கிளம்பும்படி அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்காவுக்கான நேரடி விமான சேவை தினந்தோறும் செயல்படுகிறது. பாரீஸ் மற்றும் பிராங்பர்ட் வழியாகவும் விமானங்கள் அமெரிக்கா வந்தடைகின்றன என ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ராஜ்

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

4 நிமிட வாசிப்பு

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

வெள்ளி 30 ஏப் 2021