மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 ஏப் 2021

ஒலிம்பிக்கைத் தவறவிட்ட இந்திய தடகள அணி!

ஒலிம்பிக்கைத் தவறவிட்ட இந்திய தடகள அணி!

விமான சேவை திடீரென்று ரத்து செய்யப்பட்டதால் ஒலிம்பிக் தகுதி சுற்றுப் போட்டியில் கலந்துகொள்ள முடியாத நிலை இந்திய தடகள அணிக்கு ஏற்பட்டுள்ளது.

உலக தடகள தொடர் ஓட்ட சாம்பியன்ஷிப் போட்டி போலந்து நாட்டில் உள்ள சிலிசியாவில் நாளை (மே 1) மற்றும் 2ஆம் தேதிகளில் நடக்கிறது. இது டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்றுப் போட்டியாகும். இந்தப் போட்டியில் முதல் எட்டு இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெறும்.

இந்தத் தகுதி சுற்றுப் போட்டியில் பெண்களுக்கான 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஹிமா தாஸ், டுட்டீ சந்த், தனலட்சுமி (தமிழ்நாடு), அர்ச்சனா சுசீந்திரன், தனேஷ்வரி, ஹிமாஸ்ரீ ராய் ஆகியோர் அடங்கிய இந்திய அணியும், ஆண்களுக்கான 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் முகமது அனாஸ், ஆரோக்கிய ராஜீவ் (தமிழ்நாடு), அமோஜ் ஜேக்கப், நிர்மல் நோக் டாம், சர்தாக் பாம்ப்ரி ஆகியோர் அடங்கிய இந்திய அணியும் கலந்துகொள்ள திட்டமிட்டிருந்தது.

இந்திய அணியினர் நேற்று (ஏப்ரல் 29) டெல்லியில் இருந்து ஆம்ஸ்டர்டாம் (நெதர்லாந்து) வழியாக செல்லும் விமானம் மூலம் போலந்து செல்ல டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து இருந்தனர். ஆனால், கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு நெதர்லாந்து அரசு திடீரென தடை விதித்துள்ளது. இதனால் டெல்லியில் இருந்து ஆம்ஸ்டர்டாம் செல்ல வேண்டிய விமான சேவை ரத்து செய்யப்பட்டது. எனவே, ஒலிம்பிக் தகுதி சுற்று உலக தொடர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய அணியினர் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய தடகள சம்மேளன தலைவர் சுமரிவாலா கூறுகையில் “இந்தத் தருணத்தில் நாங்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளோம். இந்தியாவில் இருந்து போலந்துக்கு நேரடி விமான போக்குவரத்து எதுவும் கிடையாது. மாற்று விமானங்கள் மூலம் இந்திய அணியை அனுப்ப எடுத்த முயற்சிகளுக்கு இதுவரை பலன் கிடைக்கவில்லை. இந்தப் பயணத்துக்கான மாற்று வழியைக் கண்டுபிடிக்க நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம். போட்டி அமைப்பாளர்கள், உலக தடகள சம்மேளனம் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் விமான நிறுவனங்களிடம் எல்லாம் கலந்து ஆலோசித்து விட்டோம். தற்போதைய சூழ்நிலையில் யாரிடம் இருந்தும் எங்களுக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை” என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.

-ராஜ்

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

வெள்ளி 30 ஏப் 2021