மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 ஏப் 2021

கோவையில் தங்கக்காசு தரும் ஏடிஎம்!

கோவையில் தங்கக்காசு  தரும் ஏடிஎம்!

கோவை மாவட்டத்தில் முதல் முறையாக ஏடிஎம் மூலம் தங்கக்காசுகள் விநியோகிக்கும் புதிய விற்பனை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தங்க நகை தயாரிப்பாளர்கள் சார்பாக கிராஸ்கட் ரோடு-சிங்கப்பூர் பிளாசாவில் உள்ள மென்ஸ் அவென்யூவில் தங்கக்காசு தரும் ஏடிஎம் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. கோவை ஃபுள் மூன் எக்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனம் ‘கோல்ட் ஆன் தி கோ’ என்ற பெயரில் இந்த ஏடிஎம் இயந்திரத்தை நிறுவியுள்ளது.

பொதுமக்கள் தங்கக் காசு ஏடிஎம் மூலம் 2 நிமிடங்களில் பணமாக செலுத்தியோ, ஆன்லைன் முறையில் பணம் செலுத்தியோ தங்கக் காசுகளை வாங்க முடியும்.

இதுகுறித்து இத்திட்டத்தின் நிறுவனர் கூறுகையில்,” கொரோனா பரவலின்போது மக்கள் கடைகளுக்கு செல்வதை தவிர்க்கும் வகையில் இந்த ஏடிஎம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 1 கிராம், 2 கிராம், 4 கிராம், 8 கிராம் என மக்கள் தேவைக்கு ஏற்ப, அன்றைய சந்தை விலையில் 22 கேரட் 916 தங்கக் காசுகள் உத்தரவாத சான்றிதழுடன் கிடைக்கும்.

24 மணி நேரமும் செயல்படக் கூடிய இந்த ஏடிஎம்மில் பணம் மற்றும் யுபிஐ, கூகுள் பே, போன் பே உள்ளிட்ட செயலிகள் மூலம் தங்க காசுகளை பெற முடியும். மேலும் அங்குள்ள க்யூஆர் கோடு மூலம் விற்பனையாளர் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள முடியும். இதுபோன்று கோவை மாநகரில் இன்னும் 10 இடங்களில் தங்க காசு ஏடிஎம் இயந்திரங்களை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

வினிதா

.

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

3 நிமிட வாசிப்பு

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

வெள்ளி 30 ஏப் 2021