மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 29 ஏப் 2021

சென்னை: கொரோனா தடுப்புப் பணிக்கு இன்று நேர்காணல்!

சென்னை: கொரோனா தடுப்புப் பணிக்கு இன்று நேர்காணல்!

கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் மருத்துவப் பணியாளர்கள் எண்ணிக்கையை அதிகரித்து பரிசோதனை, கண்காணிப்பு மற்றும் சிகிச்சைகளை அதிகப்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான நேர்காணல் இன்று (ஏப்ரல் 29) மற்றும் நாளை 30ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நடைபெறுகிறது.

சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு ஐந்தாயிரத்தை நெருங்கி வருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி தீவிரப்படுத்தி உள்ளது.

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் மருத்துவப் பணியாளர்கள் எண்ணிக்கையை அதிகரித்து பரிசோதனை, கண்காணிப்பு மற்றும் சிகிச்சைகளை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக கூடுதலாக டாக்டர்கள், நர்சுகள் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். ஒப்பந்த அடிப்படையில் 150 டாக்டர்கள், 150 நர்சுகள் நேரடியாக நியமனம் செய்யப்படுகிறார்கள்.

இதற்கான நேர்காணல் இன்று (ஏப்ரல் 29) மற்றும் நாளை (ஏப்ரல் 30ஆம் தேதி) காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நடைபெறுகிறது. தகுதி உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் நேரடியாக கல்வி தகுதி சான்றிதழ்களுடன் பங்கேற்கும்படி மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்களுக்கு மாத சம்பளம் 60,000 ரூபாயும், நர்சுகளுக்கு 15,000 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவி முற்றிலும் தற்காலிகமானது என்றும் நிரந்தரம் செய்யப்பட மாட்டாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-ராஜ்

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

சிறப்பு கட்டுரை: கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு! ...

18 நிமிட வாசிப்பு

சிறப்பு கட்டுரை:  கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வியாழன் 29 ஏப் 2021