மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 28 ஏப் 2021

அக்னி நட்சத்திரம்: வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்!

அக்னி நட்சத்திரம்: வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்!

மே 4ஆம் தேதி கத்தரி வெயில் என்னும் அக்னி நட்சத்திரக் காலம் தொடங்க உள்ளது. இது 25 நாட்கள் தொடரும். அப்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து இயல்பைவிட கூடுதலாக, அதிகபட்சமாக 110 டிகிரி வரை வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடை என்பது மார்ச், ஏப்ரல் மாதங்களில் தொடங்கிவிடும். அதில் தொடங்கி சுமார் ஆறு மாதக்காலம் தமிழகத்தில் வெயில் இருக்கும். இந்த ஆண்டுக்கான கோடைக்கால முன்னறிவிப்பு குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

அதன்படி மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை வடக்கு, வடமேற்கு, வடகிழக்கு மாநிலங்களில் பகல் நேர அதிகபட்ச வெப்ப நிலை இயல்பைவிட அதிகமாக இருக்கும். கிழக்கு மற்றும் மத்திய இந்தியாவின் மேற்கு பகுதிகளில் இயல்பைவிட வெயில் அதிகமாக இருக்கும். சத்தீஸ்கர், ஒடிசா, குஜராத், மகாராஷ்டிரா, கோவா மற்றும் ஆந்திராவின் கடலோரப் பகுதிகளில் பகல் நேர வெப்ப நிலை இயல்பைவிட அதிகமாக இருக்கும்.

தென்மாநிலங்களைப் பொறுத்தவரையில் தென்மாநிலங்கள் மற்றும் அதன் மத்திய பகுதிகளில் பகல் நேர அதிகபட்ச வெப்ப நிலை குறைவாக இருக்கும். தென்மாநிலங்களில் இரவு நேர குறைந்தபட்ச வெப்ப நிலை இயல்பைவிட அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பசிபிக் கடல் பகுதியில் நிலவும் எல்நினோ காரணமாக அதிக வெப்பமாக இருக்கும். இதனால், வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தரைப்பகுதிகளில் வெப்பக் காற்று அதிகமாக இருக்கும்.

தமிழகத்தில் தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், மே 4ஆம் தேதி கத்தரி வெயில் என்னும் அக்னி நட்சத்திர காலம் தொடங்க உள்ளது. இது 28ஆம் தேதி வரை அதாவது 25 நாட்கள் நீடிக்கும். அந்தக்காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து இயல்பைவிட கூடுதலாக வெயில் சுட்டெரிக்கும். அதிகபட்சமாக 110 டிகிரி வரை வெயில் தகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

-ராஜ்

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

புதன் 28 ஏப் 2021