மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 28 ஏப் 2021

விதிமுறையை மீறி ப்ளஸ்-1 நுழைவுத்தேர்வு?

விதிமுறையை மீறி ப்ளஸ்-1 நுழைவுத்தேர்வு?

சேலத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் விதிமுறையை மீறி ப்ளஸ்-1 வகுப்புக்கு நுழைவுத்தேர்வு நடந்ததாக வந்த புகாரின் பேரில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் நான்கு ரோடு பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் படித்த 10ஆம் வகுப்பு மாணவர்கள் ப்ளஸ்-1 வகுப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்காக கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பள்ளியில் படித்த 10ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. அதில், ப்ளஸ்-1 வகுப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு நடைபெறுகிறது. பள்ளியில் படித்த 10ஆம் வகுப்பு மாணவர்கள் சேர விருப்பம் தெரிவித்தால் நுழைவுத்தேர்வு எழுத வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் பள்ளிக்கு வந்தனர். பின்னர் மாணவர்கள் அனைவரும் பள்ளி வளாகத்துக்குள் சமூக இடைவெளியுடன் தேர்வு எழுத அமரவைக்கப்பட்டனர். பின்னர் மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வுக்கான வினாத்தாள் வழங்க ஆசிரியர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

இதனிடையே, இந்த விவகாரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அதன்பேரில் அவர், சம்பந்தப்பட்ட அரசு உதவி பெறும் பள்ளியின் தலைமை ஆசிரியரைத் தொடர்பு கொண்டு பேசினார்.

இதையடுத்து தேர்வு எழுத வந்த மாணவர்கள் அனைவரும் உடனடியாக அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில், ப்ளஸ்-1 வகுப்புக்கு நுழைவுத்தேர்வு நடத்த கல்வித்துறையிடம் அனுமதி பெறப்பட்டதா என்பது குறித்து சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களிடம் கல்வித்துறை அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்திவருகின்றனர்.

-ராஜ்

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

புதன் 28 ஏப் 2021