மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 28 ஏப் 2021

தமிழக வீரர் டி.நடராஜன் நலம்பெற வாழ்த்துகள்!

தமிழக வீரர் டி.நடராஜன் நலம்பெற வாழ்த்துகள்!

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் விளையாடிய தமிழக வீரர் டி.நடராஜன் காயம் காரணமாக தொடரில் இருந்து முழுவதுமாக விலகினார். இந்த நிலையில் முழங்கால் காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டவருக்கு விரைவில் நலம்பெற்று மீண்டு வர வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக வளர்ந்து வருபவர் தமிழகத்தைச் சேர்ந்த டி.நடராஜன். இடக்கை பந்து வீச்சாளரான இவர், கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலமாக, நெட் பவுலராகச் சென்று, அதன்பின் இந்திய அணிக்காக மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் அறிமுகமாகி முத்திரை படைத்தார்.

இங்கிலாந்து தொடரின்போது காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாடவில்லை. கடைசி நேரத்தில் அணியில் இணைந்தார். ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக முதல் போட்டியில் விளையாடினார். அதன்பின் காயம் காரணமாக தொடர் முழுவதிலும் இருந்து வெளியேறினார்.

இந்த நிலையில் முழங்கால் காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதுகுறித்து நடராஜன் தன் ட்விட்டர் பக்கத்தில் ‘‘நான் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். மருத்துவக்குழு, அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி. அதேபோல் காயத்தில் இருந்து விரைவாக மீண்டு வர வாழ்த்து தெரிவித்த பிசிசிஐ மற்றும் அனைவருக்கும் நன்றி’’ எனப் பதிவிட்டுள்ளார்.

-ராஜ்

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

புதன் 28 ஏப் 2021