மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 28 ஏப் 2021

கிச்சன் கீர்த்தனா: முருங்கையிலை அடை

கிச்சன் கீர்த்தனா: முருங்கையிலை அடை

நம் தமிழ்க்குடிகள் உணவாகப் பயன்படுத்தியவற்றுள் முருங்கை முதன்மையானது. உலக அளவில் அதிகமாக முருங்கை பயிரிடும் நாடு சந்தேகமே இல்லாமல் இந்தியாதான். நம் நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 13 லட்சம் டன் முருங்கை விளைவிக்கப்படுகிறது. அதிக அளவில் முருங்கை விளைவிக்கும் மாநிலம் ஆந்திரம். இரண்டாம் இடத்தில் கர்நாடகம். தமிழகத்துக்கு மூன்றாவது இடம். ஆனால், அதிக ரகங்களில் முருங்கை பயிரிடப்படும் மாநிலம் என்றால் அது தமிழகம்தான்.

என்ன தேவை?

முருங்கையிலை - ஒரு கப்

துவரம்பருப்பு - முக்கால் கப்

பாசிப்பருப்பு - அரை கப்

புழுங்கல் அரிசி - கால் கப்

வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

காய்ந்த மிளகாய் - 2

சீரகம் - ஒரு டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, புழுங்கல் அரிசியைக் கழுவி, 2 - 3 மணி நேரம் ஒன்றாக ஊறவைக்கவும். பிறகு ஊறவைத்தவற்றுடன் காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். மாவைப் பெரிய பாத்திரத்தில் சேர்த்து, இதனுடன் நறுக்கிய வெங்காயம், முருங்கையிலை, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். தவாவைச் சூடாக்கி, மாவைத் தோசை போல வார்த்து, ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு இருபுறமும் சுட்டெடுக்கவும். விருப்பமான சட்னியுடன் பரிமாறவும்.

நேற்றைய ஸ்பெஷல்: முருங்கைக்கீரை வடை

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

புதன் 28 ஏப் 2021