மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 27 ஏப் 2021

சமூக வலைதளங்கள்: தவறான பதிவுகளுக்கு மத்திய அரசு நடவடிக்கை!

சமூக வலைதளங்கள்: தவறான பதிவுகளுக்கு மத்திய அரசு நடவடிக்கை!

கொரோனா வைரஸ் குறித்த பல்வேறு கருத்துகளையும், மத்திய அரசுக்கு எதிரான கருத்துகளையும் சமூக வலைதளங்களில் தினமும் பல்லாயிரம் பேர் பகிர்ந்து வருகின்ற நிலையில், சில பயனர்கள் சமூக ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைக் கருத்தில்கொண்டு, சர்ச்சைக்குரிய வகையில் பதிவிடப்பட்டுள்ள தவறான தகவல்களை உடனடியாக நீக்க வேண்டும் எனப் பல்வேறு சமூக வலைதளங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக ட்விட்டர், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள நிர்வாகங்களுக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில், ‘சமூக வலைதளங்களில் பலர் கொரோனா தொற்று குறித்து தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். இது மக்களிடையே தேவையற்ற குழப்பத்தையும், பீதியையும் ஏற்படுத்தி வருகிறது. எனவே, இதுபோன்ற சர்ச்சைக்குரிய வகையில் பதிவிடப்பட்ட பதிவுகளை உடனடியாக நீக்க வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளது.

-ராஜ்

உலக பட்டினிக் குறியீடு: இந்தியாவுக்கான இடம் - மோடியை வாழ்த்திய ...

5 நிமிட வாசிப்பு

உலக பட்டினிக் குறியீடு: இந்தியாவுக்கான இடம் -  மோடியை வாழ்த்திய  கபில் சிபல்

வேலைவாய்ப்பு: இந்துசமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்துசமய அறநிலையத் துறையில் பணி!

அனிதா முதல் அனு வரை... : தொடரும் நீட் தற்கொலைகள்!

5 நிமிட வாசிப்பு

அனிதா முதல் அனு வரை... :  தொடரும் நீட் தற்கொலைகள்!

செவ்வாய் 27 ஏப் 2021