மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 26 ஏப் 2021

வீணாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ்கள்!

வீணாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ்கள்!

‘செங்கல்பட்டில் ஐந்து ஆண்டுகளாக வெயிலிலும், மழையிலும் வீணாகும் ஆம்புலன்ஸ்களை இந்த கொரோனா காலத்தில் பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. பல்வேறு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்குப் படுக்கைகள் இல்லை, கொரோனா தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் இல்லை என பல்வேறு புகார்கள் உள்ள நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரிக்கு சொந்தமான மைதானத்தில் 100-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் வீணாக நிற்கிறது

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட இந்த ஆம்புலன்ஸ்கள் அனைத்தும் மழையிலும் வெயிலிலும் வீணாக உள்ளது. இந்த ஆம்புலன்ஸ்களை பழுது நீக்கி ஆம்புலன்ஸ் பற்றாகுறை உள்ள ஆஸ்பத்திரிகளுக்குப் பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அந்தப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ராஜ்

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

திங்கள் 26 ஏப் 2021