மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 26 ஏப் 2021

ரிலாக்ஸ் டைம்: வெள்ளரி - ஆரஞ்சு ஜூஸ்

ரிலாக்ஸ் டைம்: வெள்ளரி - ஆரஞ்சு ஜூஸ்

கோடையில் ஏற்படும் வெப்பத்தைத் தணித்து உடலுக்குக் குளிர்ச்சி தரும் இந்த ஜூஸ், குழந்தைகள், இளைஞர்கள், பெண்களுக்கு ஏற்றது. மேலும் செரிமான சக்தியை மேம்படுத்தும், குமட்டலைத் தடுக்கும் இந்த ஜூஸை நீரிழிவாளர்கள், இதய நோயாளிகளும் அருந்தலாம். .

எப்படிச் செய்வது?

நான்கு ஆரஞ்சு மற்றும் ஒரு வெள்ளரியைத் தோல் நீக்கி, சிறிதளவு செலரி (டிபார்ட்மென்ட்டல் கடைகளில் கிடைக்கும்), நறுக்கிய இஞ்சி சிறிதளவு, பனங்கற்கண்டு தேவையான அளவு சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து, வடிகட்டிப் பருக வேண்டும். தேவைப்பட்டால், சிறிது ஐஸ்கட்டிகள் சேர்த்துக்கொள்ளலாம்.

சிறப்பு

ஆரஞ்சு, செலரி, வெள்ளரி, இஞ்சி கலோரி குறைந்தவை. ஆரஞ்சுப்பழத்தில் இருக்கும் `பெக்டின்’ என்ற ரசாயனம், குடலில் ஏற்படும் புண்களை ஆற்றும். செலரி ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது. செலரிக்குப் பதிலாக புதினா, கொத்தமல்லி சேர்த்தும் ஜூஸ் தயாரிக்கலாம். இதில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் சருமம் பொலிவு பெறும்.

-ராஜ்

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

திங்கள் 26 ஏப் 2021