மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 25 ஏப் 2021

அம்மா உணவகங்கள் இன்று வழக்கம்போல் செயல்படும்!

அம்மா உணவகங்கள் இன்று வழக்கம்போல் செயல்படும்!

சென்னையில் அம்மா உணவகங்கள் இன்று (ஏப்ரல் 25) வழக்கம்போல் செயல்படும் என்றும் இன்று நடைபெறும் ஊரடங்கின்போது வழக்கத்தைவிட அதிகம் பேர் சாப்பிட வருவார்கள் என்பதால் கூடுதலாக உணவு தயாரிக்கவும் மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

சென்னையில் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு குறைந்த கட்டணத்தில் உணவு வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது அம்மா உணவகங்களில் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கப்பட்டது. கூலித்தொழில் முடங்கிய நிலையில், ஏழைகளின் அட்சயப் பாத்திரமாக அம்மா உணவகம் விளங்கியது. இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக இன்று மீண்டும் முழு அடைப்பு நடைபெறுகிறது. ஹோட்டல்கள், சிறு கடைகள், டீக்கடைகள் அனைத்தும் நேற்று (நேற்று 24) இரவு 9 மணிக்கு மூடப்பட்டன. இனி நாளை (ஏப்ரல் 26) காலையில்தான் அனைத்து கடைகளும் திறக்கப்படுகிறது. இதனால் அம்மா உணவகங்களை முழுமையாக செயல்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

ஊரடங்கின்போது மூன்று வேளையும் அம்மா உணவகம் மூலமாக உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலையில் இட்லி, மதியம் கலவை சாதங்கள், இரவு சப்பாத்தி அல்லது சாம்பார் சாதம் போன்றவை தயாரித்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

உணவு இலவசமாக வழங்குவதா, வழக்கம் போல குறைந்த விலையில் விற்பதா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. மேலும் இன்று நடைபெறும் ஊரடங்கின்போது வழக்கத்தைவிட அதிகம் பேர் சாப்பிட வருவார்கள் என்பதால் கூடுதலாக உணவு தயாரிக்கவும் மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

-ராஜ்

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

ஞாயிறு 25 ஏப் 2021