மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 25 ஏப் 2021

உபி சென்ற ஆக்சிஜன் டேங்கர் ரயில்!

உபி சென்ற ஆக்சிஜன் டேங்கர் ரயில்!

ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்க ஜார்க்கண்ட் மாநிலம் போகோவில் இருந்து ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு இயக்கப்பட்டது. இந்த ரயில் நேற்று (ஏப்ரல் 24) உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சென்றடைந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் நோயாளிகள் ஆஸ்பத்திரிகளில் குவிந்து வருகிறார்கள். இதனால் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை ரயில்வே துறை தொடங்கி உள்ளது. இதில் திரவ மருத்துவ ஆக்சிஜன் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களைக் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநிலம் போகோவில் இருந்து ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு இயக்கப்பட்டது. இந்த ரயில் நேற்று (ஏப்ரல் 24) உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சென்றடைந்தது. இந்த ரயில்களில் மொத்தம் மூன்று டேங்கர்களில் திரவ மருத்துவ ஆக்சிஜன் நிரப்பப்பட்டிருந்தது.

இதுகுறித்து பேசியுள்ள மாநிலக் கூடுதல் தலைமைச் செயலாளர் அவினிஷ்குமார் அவஸ்தி, “ரயிலில் வந்த திரவ மருத்துவ ஆக்சிஜன்கள் லக்னோவுக்கு அனுப்ப இரண்டு லாரிகளில் ஏற்றப்பட்டது. அதேபோல் ஒரு லாரி வாரணாசிக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒவ்வொரு லாரியிலும் 15,000 லிட்டர் மருத்துவ ஆக்சிஜனை கொண்டு செல்ல முடியும்.

லாரியில் ஏற்றி அனுப்பப்பட்டுள்ள மருத்துவ ஆக்சிஜன்கள் லக்னோவில் பயன்படுத்தப்படும். இது அங்கு தேவைப்படும் ஆக்சிஜன் அளவில் பாதியை சரி செய்யும். தற்போது தலைநகரம் (லக்னோ) நல்ல நிலையில் இருக்கிறது” என்றார்.

இதுகுறித்து அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஜெய்பிரதாப் சிங், “ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் வந்துள்ளதை அடுத்து மாநிலத்தின் தற்போதைய நெருக்கடியான நிலைமை கணிசமாகக் குறையும்” என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், விரைவில் உத்தரப்பிரதேசத்துக்கு இரண்டாவது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது.

-ராஜ்

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

8 நிமிட வாசிப்பு

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

3 நிமிட வாசிப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

ஞாயிறு 25 ஏப் 2021