மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 25 ஏப் 2021

வரத்து அதிகரிப்பு - வாங்க ஆள் இல்லை - புளி விலை சரிவு... விவசாயிகள் கவலை!

வரத்து அதிகரிப்பு - வாங்க ஆள் இல்லை - புளி விலை சரிவு... விவசாயிகள் கவலை!

கிருஷ்ணகிரி பழையபேட்டை சந்தைக்கு புளி வரத்து அதிகரித்துள்ளது. ஆனால் வாங்க ஆள் இல்லாமல் விலை சரிவடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி பழையபேட்டையில் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தைக்கு ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்தும் புளிகள் அதிக அளவில் விற்பனைக்குக் கொண்டு வரப்படும். ஒவ்வொரு வாரமும் ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளில் இங்கு சந்தை நடைபெறும்.

இந்த சந்தையில் ஏராளமான விவசாயிகள் புளிகளை வாகனங்களில் ஏற்றி வந்து விற்பனைக்காக சாலையோரம் குவித்து வைப்பார்கள். வியாபாரிகள் புளியின் தரத்தை பார்த்து வாங்கி செல்வது வழக்கம். அதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு கிலோ புளி தரத்துக்கேற்ப ரூ.27 முதல் ரூ.45 வரை விற்பனையானது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 25) முழு ஊரடங்கு என்பதால் நேற்று (ஏப்ரல் 24) சந்தை கூடியது. இதற்காக சந்தைக்கு ஏராளமான விவசாயிகள் புளியை விற்பனைக்குக் கொண்டு வந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் காரணமாக இரவு ஊரடங்கு, முழு ஊரடங்கு என்பதால் வாங்குபவர்கள் யாரும் வரவில்லை.

இதனால் புளியின் விலை கடந்த வாரத்தைக் காட்டிலும் சரிவடைந்தது. ஒரு கிலோ புளி அதிகபட்சமாக ரூ.35-க்கு விற்பனையானது. இந்த நிலை மேலும் தொடரும் என்பதாலும் விலை சரிவு மேலும் அதிகரிக்கும் என்பதாலும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

-ராஜ்

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

ஞாயிறு 25 ஏப் 2021