மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 25 ஏப் 2021

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - ஈஸியா சமைக்க... ஹெல்த்தியா சாப்பிட...

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - ஈஸியா சமைக்க... ஹெல்த்தியா சாப்பிட...

தற்போதைய ஊரடங்கு நேரத்தில்... சிலருக்கு என்ன சமைப்பது எனக் குழப்பம்... சிலருக்கு எப்படிச் சமைப்பது என்று குழப்பம்... வேறு சிலருக்கோ சமைத்த உணவு மீந்துவிட்டால் என்ன செய்வது என்ற குழப்பம்... பெருந்தொற்றுக் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிற நாம் ஆரோக்கியமாக சாப்பிட வேண்டும், அதேநேரம் உணவுப் பொருளை வீணாக்கவும் கூடாது.

அவசர சமையல், திடீர் சமாளிப்பு, தினசரி சமையலை ஆரோக்கியமாக மாற்றுவது என எல்லாவற்றுக்குமான தீர்வுகளில் சில...

* தினமும் இட்லி, தோசையா என்று முகம் சுளிக்கும் குடும்பத்தைச் சமாளிப்பது இல்லத்தரசிகளுக்குப் பெரும்பாடு. மீந்த இட்லியை உதிர்த்து, உப்புமாவாகச் செய்தது அந்தக் காலம். இப்போது அதை இத்தாலியன், சைனீஸ் உணவுகளாக மாற்றுவது தான் டிரெண்டு.

* இட்லி மாவில் நறுக்கிய வெங்காயம், குடமிளகாய், தக்காளி ஆகியவற்றை வதக்கி, இத்தாலியன் ஸ்பைஸ் பவுடர் (டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்களில் கிடைக்கும்), சிறிதளவு துருவிய சீஸ் சேர்த்துக் கலக்கவும். ஒரு குக்கர் பாத்திரத்தில் எண்ணெய் தடவி ஒரே பெரிய இட்லியாக ஊற்றி ஆவியில் வேகவைத்து துண்டுகளாக வெட்டிப் பரிமாறலாம்.

* சப்பாத்தியை கத்தரிக்கோலால் நூடுல்ஸ் போல நீளவாக்கில் வெட்டவும். வெங்காயம், பூண்டு, கோஸ், கேரட், குடமிளகாய் போன்ற காய்கறிகளை வதக்கி அதில் சில்லி சாஸ், சோயா சாஸ் கலந்து வெட்டிவைத்த சப்பாத்தி துண்டுகளைச் சேர்த்துக் கிளறிப் பரிமாறலாம்.

* மீந்த காய்கறிப் பொரியல்களில் சிறிதளவு பீட்சா சாஸ், இத்தாலியன் ஹெர்ப்ஸ், துருவிய சீஸ், சில்லி ஃப்ளேக்ஸ் ஆகியவற்றைக் கலந்து இரண்டு பிரெட் ஸ்லைஸ்களுக்கு நடுவில் வைத்து மூடி டோஸ்ட் செய்து பீட்சா சாண்ட்விச்சாக பரிமாறலாம். வேகவைத்த உருளைக்கிழங்கு, நறுக்கிய கேரட், பட்டாணி போன்ற காய்கறிகளை வடித்த சாதத்தில் கலந்து மசித்து பச்சை மிளகாய், மல்லித்தழை, புதினா, கரம்மசாலா சேர்த்து கட்லெட்டாக செய்து தவாவில் எண்ணெய் ஊற்றிப் பொரித்தெடுக்கலாம்.

* பச்சைப்பட்டாணி சீசனில் மலிவாகக் கிடைக்கும்போது அதை வாங்கி உரித்து ஜிப்லாக் பைகளில் போட்டு நன்றாக மூடி ஃப்ரீசரில் (Freezer) வைத்தால் தேவையானபோது உபயோகப்படுத்தலாம். பட்டாணியைத் தண்ணீரில் கழுவவோ, வேக வைக்கவோ வேண்டாம். சமைக்க வெளியில் எடுக்கும்போது கழுவினால் போதும். இதைப்போல மொச்சையையும் சீசனில் வாங்கி உரித்து கவரில் போட்டு ஃப்ரீசரில் வைத்து உபயோகப்படுத்தலாம்.

* தக்காளி மலிவாகக் கிடைக்கும்போது வாங்கி, தக்காளியை வெங்காயத்துடன் மிக்ஸியில் அரைத்து நன்றாகக் கொதிக்க வைத்து ஆறியவுடன் சின்னச் சின்ன ஜிப்லாக் பைகளில் ஊற்றி ஃப்ரீசரில் வைத்தால் தேவையானபோது எடுத்து உபயோகிக்கலாம்.

* பால் திரிந்துவிட்டால் அதைக் கொட்ட வேண்டாம். அதில் ஒரு டேபிள்ஸ்பூன் தயிரோ, எலுமிச்சைப் பழச்சாறோ சேர்த்து, அதை மேலும் முழுவதாகத் திரித்து வடிகட்டி பனீர் செய்யலாம்.

* சமையலில் கறிவேப்பிலையை முழுதாகப் போட்டால் அனைவரும் சாப்பிடும்போது தனியே எடுத்து வைத்து விடுவார்கள். எனவே, கறி வேப்பிலையைக் கழுவி, நன்றாக வெயிலில் காயவைத்து, பொடி செய்து சாம்பார், ரசம், பொரியல்களில் கலக்கலாம். புதினாவையும் இவ்வாறு கழுவி காயவைத்து பொடி செய்து உபயோகிக்கலாம்.

* வெந்தயக்கீரை கிடைத்தால் அதைக் காம்பு நீக்கி கழுவி வெயிலில் நன்றாகக் காய வைத்து பிளாஸ்டிக் டப்பாவிலோ, ஜிப்லாக் கவரிலோ போட்டு ஃபிரிட்ஜில் வைத்துக்கொண்டால் நார்த் இந்தியன் கிரேவிகளில் உபயோகப்படுத்தும் ‘கஸூரி மேத்தி’ ரெடி.

நேற்றைய ஸ்பெஷல்: செள செள சப்ஜி

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

ஞாயிறு 25 ஏப் 2021