மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 24 ஏப் 2021

முழு ஊரடங்கு: மெட்ரோ ரயில் இயங்கும்!

முழு ஊரடங்கு: மெட்ரோ ரயில் இயங்கும்!

முழு ஊரடங்கு காரணமாக நாளை (ஏப்ரல் 25 - ஞாயிற்றுக்கிழமை) ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் இயங்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆனால், நாளை சென்னையில் மெட்ரோ ரெயில் இயங்கும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை (ஏப்ரல் 25) ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், முழு ஊரடங்கு காரணமாக ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் இயங்காது என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழகத்தில் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நாள்களில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் செயல்படாது. எனினும், ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு மற்றும் ரத்து செய்து கொள்ளலாம். முன்பதிவு அல்லாத டிக்கெட் வழங்கும் மையங்கள் வழக்கம் போல் செயல்படும்’ என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் முழு ஊரடங்கான ஞாயிற்றுக்கிழமைகளில் நான்கில் ஒரு பங்கு அளவிலேயே சென்னையில் உள்ள மின்சார ரயில்கள் இயக்கப்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் முன்களப் பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய பணியாளர்கள் மட்டுமே பயணிக்கலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஆனால், முழு ஊரடங்கு நாளான ஞாயிறு அன்று சென்னையில் மெட்ரோ ரெயில் காலை 7 முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரெயில் இயங்கும் என்றும் விம்கோ நகர் - விமான நிலையம் இடையே ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மட்டுமே இயங்கும் என்றும் மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

-ராஜ்

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

2 நிமிட வாசிப்பு

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

குவைத்தில் வீட்டு வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

4 நிமிட வாசிப்பு

குவைத்தில் வீட்டு வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

3 நிமிட வாசிப்பு

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

சனி 24 ஏப் 2021