மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 24 ஏப் 2021

அமர்நாத் யாத்திரை: முன்பதிவு நிறுத்தம்

அமர்நாத் யாத்திரை: முன்பதிவு நிறுத்தம்

கொரோனா தொற்று பரவல் காரணமாக அமர்நாத் பனிலிங்க ஆலய புனிதப் பயணத்துக்கான முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகிறார்கள். இந்த யாத்திரை ஆண்டுதோறும் நடைபெறும்.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு யாத்திரை ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டுக்கான யாத்திரை ஜூன் 28இல் தொடங்கி, ஆகஸ்ட் 22 வரை நடக்கும் என கோயில் நிர்வாகம் அறிவித்து இருந்தது. இதற்கான முன்பதிவு ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை தொடங்கப்படவில்லை.

இந்த நிலையில், கொரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலை நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, அமர்நாத் பனிலிங்க புனித பயணத்துக்கான முன்பதிவு, தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ஸ்ரீ அமர்நாத் கோயில் வாரியம் அறிவித்தது. நிலைமை கட்டுக்குள் வந்த பின், முன்பதிவு மீண்டும் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

-ராஜ்

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

2 நிமிட வாசிப்பு

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... ...

4 நிமிட வாசிப்பு

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... எதற்காக?

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

சனி 24 ஏப் 2021