மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 24 ஏப் 2021

கிச்சன் கீர்த்தனா: செள செள சப்ஜி

கிச்சன் கீர்த்தனா: செள செள சப்ஜி

நீர்ச்சத்து காய்கறிகளில் செள செளவும் ஒன்று. இது கோடையில் ஏற்படும் ரத்த அழுத்த பாதிப்புகள், வயிறு தொடர்பான பிரச்னைகளை சரி செய்யும். கருவுற்ற மகளிருக்கு சிறந்த ஊட்டத்தை அளிக்கும் காயாக சௌ சௌ திகழ்கிறது. மேலும் சௌ சௌவில் உள்ள கால்சியம் சத்து, குழந்தைகளின் உடல் வளர்ச்சிகளை ஊக்கப்படுத்தி, அவர்கள் எலும்பு வளர்ச்சியை வலுவாக்கும்.

என்ன தேவை?

செள செள - ஒன்று

வெங்காயம் - ஒன்று

தக்காளி - ஒன்று

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

சாம்பார்தூள் - இரண்டு டீஸ்பூன்

கடலை மாவு - இரண்டு டேபிள்ஸ்பூன்

கடுகு, உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

எண்ணெய் - இரண்டு டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

செள செளவைத் தோல் சீவி பொடியாக நறுக்கவும். வெங்காயம், தக்காளியையும் பொடியாக நறுக்கவும். வாணலியை லேசாகச் சூடாக்கி அதில் கடலை மாவு சேர்த்து லேசாக வறுத்துக்கொள்ளவும். பின்பு ஒரு தட்டில் மாற்றிக்கொள்ளவும். அதே வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்துத் தாளிக்கவும். பின்பு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். பின்பு பொடியாக நறுக்கிய செள செளவைச் சேர்த்து வதக்கவும். செள செள லேசாக வதங்கியதும் அதில் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கலந்து இரண்டு முறை தண்ணீர் தெளித்து மூடிவைத்து வேகவிடவும். செள செள நன்கு வெந்ததும் அதில் சாம்பார்தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி விடவும். பின்பு வறுத்த கடலை மாவு சேர்த்து நன்கு புரட்டி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

நேற்றைய ஸ்பெஷல்: சுரைக்காய் பப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

சனி 24 ஏப் 2021