மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 22 ஏப் 2021

கொரோனா: சுகாதாரப் பணியாளர்களுக்குப் புதிய காப்பீடு திட்டம்!

கொரோனா: சுகாதாரப் பணியாளர்களுக்குப் புதிய காப்பீடு திட்டம்!

கொரோனா சிகிச்சை பணிகளில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு புதிய காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் லட்சக்கணக்கான நோயாளிகளை மீட்டெடுப்பதில் மருத்துவ உலகம் முக்கிய பங்காற்றுகிறது.

அந்தவகையில் கொரோனாவுக்கு எதிராகப் போராடுவதில் சுகாதார பணியாளர்கள் முன்களத்தில் உள்ளனர். இதனால் அவர்கள் கொரோனா வாரியர்ஸ் அழைக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு கொரோனாவுடன் அன்றாடம் போராடி வரும் இவர்களும் அவ்வப்போது கொரோனா தாக்கி மரணத்தைத் தழுவுவது உண்டு. பலர் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று மீண்டு வருகின்றனர்.

இப்படி கொரோனாவுக்கு எதிராகப் போராடி வரும் இந்த வீரர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் பாதுகாக்கும் பொருட்டு மத்திய அரசு கடந்த ஆண்டு மார்ச் மாதம் காப்பீட்டுத் திட்டத்தை அறிவித்தது.

‘பிரதான் மந்திரி கரிப் கல்யான்’ தொகுப்பு எனப்படும் இந்தக் காப்பீடு திட்டத்தில் ரூ.50 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இது கொரோனா பணிகளில் ஈடுபட்டு இருக்கும் சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், அவர்களது குடும்பத்துக்கு ஒரு பாதுகாப்பாகவும் இருக்கும்.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம் மூன்று முறை நீட்டிக்கப்பட்டது. இதில் மூன்றாவது முறை நீட்டிக்கப்பட்ட இந்தக் காப்பீடு திட்டத்தின் கால அளவு வருகிற ஏப்ரல் 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

எனவே 24ஆம் தேதிக்குப்பிறகு புதிய காப்பீடு திட்டம் சுகாதார பணியாளர்களுக்குச் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு நேற்று (ஏப்ரல் 20) அறிவித்து உள்ளது. இதற்காக நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்துடன் பேசி வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இது தொடர்பாக அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சுகாதாரப் பணியாளர்களுக்கான காப்பீடு திட்டத்தின் மூலம் இதுவரை 287 பேருக்கு காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு இருக்கிறது. கொரோனாவுடன் போராடும் சுகாதார ஊழியர்களின் மன உறுதியை உயர்த்துவதில் இந்தத் திட்டம் ஒரு முக்கியமான உளவியல் பங்கைக் கொண்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளது.

கொரோனா போர்வீரர்களின் இந்தக் காப்பீட்டுத் திட்டம் வருகிற 24ஆம் தேதி வரை தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் எனக்கூறியுள்ள சுகாதார அமைச்சகம், அதைத்தொடர்ந்து ஒரு புதிய காப்பீட்டுக்கொள்கை பயன்பாட்டுக்கு வரும் என்றும் அந்த அறிக்கையில் கூறியுள்ளது.

-ராஜ்

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

2 நிமிட வாசிப்பு

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

குவைத்தில் வீட்டு வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

4 நிமிட வாசிப்பு

குவைத்தில் வீட்டு வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

3 நிமிட வாசிப்பு

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

வியாழன் 22 ஏப் 2021