மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 21 ஏப் 2021

இந்தியாவுக்குச் செல்வதைத் தவிர்க்கவும்: அமெரிக்கா அறிவுறுத்தல்!

இந்தியாவுக்குச் செல்வதைத் தவிர்க்கவும்: அமெரிக்கா அறிவுறுத்தல்!

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அமெரிக்கர்கள் இந்தியாவுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும் என அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் ஐந்து இடங்களில் உள்ளன. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

பல மாநிலங்களில் பகுதி நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாட்டு விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்காவிலும் கொரோனாவின் கோரத்தாண்டவம் குறைந்தபாடில்லை. கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் அடிப்படையில் அமெரிக்காவில் 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையம், இந்தியப் பயணத்தைத் தவிர்க்க வேண்டும் எனப் பயணிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘கொரோனா அதிகரித்து வருவதால் அமெரிக்கர்கள் இந்தியாவுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும். தடுப்பூசி போட்டிருந்தாலும் பயணம் செய்வது அபாயத்தை ஏற்படுத்தும். கண்டிப்பாக செல்வதாக இருந்தால் இந்தியா செல்லும் முன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்’ என அறிவுறுத்தியுள்ளது.

-ராஜ்

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

புதன் 21 ஏப் 2021