மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 21 ஏப் 2021

சிறப்பு டிஜிபி வழக்கு: சிபிஐக்கு மாற்ற மறுப்பு!

சிறப்பு டிஜிபி வழக்கு: சிபிஐக்கு மாற்ற மறுப்பு!

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு டிஜிபி மீது தொடரப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஐபிஎஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளதால், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை கூடுதல் எஸ்பி-யான ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை இன்று(ஏப்ரல் 21) தலைமை நீதிபதி சஞ்ஜீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு விசாரணை செய்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பெண் எஸ்பி பாலியல் வழக்கு விசாரணையை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து கண்காணித்து வருவதாகவும், சிறப்பு டிஜிபிக்கு எதிரான விசாரணையின் முன்னேற்றம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இதுகுறித்து விசாகா கமிட்டியும், விசாரணை அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது என தெரிவிக்கப்பட்டது

இதையடுத்து சிறப்பு டிஜிபி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விசாகா கமிட்டி விசாரணைக் குழுவின் விசாரணைக்கும், சிபிசிஐடி விசாரணைக்கும் டிஜிபி ராஜேஷ்தாஸ் நேரில் ஆஜராகி முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை தனிநீதிபதி கண்காணித்து வருவதால், மேற்கொண்டு அதை சிபிஐக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை என தெரிவித்தனர். மேலும், நீதிமன்றத்தின் இந்த உத்தரவு சிறப்பு டிஜிபி மீதான விசாரணையில் பாதிப்பை ஏற்படுத்தாது. அதேசமயம், வழக்கு விசாரணை நேர்மையாகவும், நியாயமாகவும் நடக்க வேண்டும். ஒருதலைபட்சமாக முடிவெடுக்கக் கூடாது என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இதையடுத்து, ஓய்வுபெற்ற கூடுதல் எஸ்பி தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

வினிதா

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

புதன் 21 ஏப் 2021