மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 21 ஏப் 2021

இரவு ஊரடங்கு: போக்குவரத்து துறைக்கு ரூ.15 கோடி இழப்பு!

இரவு ஊரடங்கு:  போக்குவரத்து துறைக்கு ரூ.15 கோடி இழப்பு!

இரவு நேர ஊரடங்கு காரணமாக ஒருநாளைக்கு ரூ.12 லிருந்து 15 கோடி வரை இழப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது என போக்குவரத்துத் துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி முதல் தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால், இரவு நேரங்களில் அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்துக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டது. அதனால், தமிழகத்தில் நேற்று முதல் விரைவு பேருந்துகள் அனைத்தும் பகலில் இயக்கப்படுகின்றன. பகல் நேரம் என்பதால் குறைவான பயணிகளே பேருந்துகளில் பயணிக்கின்றனர்.

சென்னை பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை, போக்குவரத்து துறை செயலர் சமயமூர்த்தி இன்று (ஏப்ரல் 21) பார்வையிட்டார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் ஓட்டுநர்கள், நடத்துனர்கள், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மக்களிடையே நேரிடையாக தொடர்பு வைத்திருப்பதால், ஒரு நடத்துநர் அல்லது ஓட்டுநருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், அதன்மூலம் 400 முதல் 500 பேர் வரைக்கும் நோய் பரவ வாய்ப்பு இருக்கிறது.

எட்டு போக்குவரத்து கழகங்களில் உள்ள 45 வயதுக்கு மேற்பட்ட 70 ஆயிரம் பணியாளர்களில் 25,450 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 37 சதவிகித பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு இரண்டு வாரத்தில் தடுப்பூசி செலுத்தப்படும்.

இரவுநேர ஊரடங்கு அறிவிப்பால் அரசு விரைவுப் பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று தமிழகத்தில் மொத்தமாக 16,284 பேருந்துகள் இயக்கப்பட்டன. பொதுவாக இரவு நேரங்களில் 80 சதவிகிதம் இயக்கப்படும் பேருந்துகள், நேற்று பகல் நேரங்களில் 350 அரசு விரைவுப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 2,790 பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதனால், போக்குவரத்துத் துறைக்கு ஒரு நாளைக்கு தோராயமாக 12 முதல் 15 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

வினிதா

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

புதன் 21 ஏப் 2021