மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 21 ஏப் 2021

நீர்நிலைகளில் கழிவுநீர்: தலைமை செயலாளருக்கு உத்தரவு!

நீர்நிலைகளில் கழிவுநீர்: தலைமை செயலாளருக்கு உத்தரவு!

ஆறுகள், நீரோடைகளில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் விவரங்களைப் பெற்று விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய தமிழக தலைமைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரமேஷ் மணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்திருந்தார். அதில், “விழுப்புரம் மாவட்டம் நரையூர் கிராமத்தில் ஓடும் பாசன கால்வாயில் அப்பகுதி குடியிருப்புவாசிகள் கழிவுநீரை வெளியேற்றுவதால், வேளாண்மை பாதிப்பதுடன், கழிவுகளால் கால்வாய் நீர் போக்குவரத்தும் தடைபடுகிறது. இதற்கு அதிகாரிகள்நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று(ஏப்ரல் 21) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கழிவுநீரை கால்வாயில் வெளியேற்றக் கூடாது என அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து பேசிய நீதிபதிகள், ஆறு, கால்வாய்களில் கழிவுநீரை வெளியேற்றுவதால், நீர் மாசடைகிறது. இதைத் தடுக்க வேண்டும். அதனால், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், அலுவலர்கள், இந்தப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வுசெய்து, தேவைப்படும் பட்சத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

அதுபோன்று தமிழகம் முழுவதும் ஆறுகள், நீரோடைகள், கால்வாய்களில் கழிவுநீரை வெளியேற்றுவதைத் தடுக்கவும், தேவைப்படும் இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கவும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் அறிவுறுத்த வேண்டும்.

மேலும், இதுகுறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் விவரங்களை பெற்று விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஜூலை மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.

வினிதா

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

புதன் 21 ஏப் 2021