மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 21 ஏப் 2021

ரிலாக்ஸ் டைம்: இஞ்சி - பீட்ரூட் ஜூஸ்

ரிலாக்ஸ் டைம்: இஞ்சி - பீட்ரூட் ஜூஸ்

கொரோனா பரவலைத் தொடர்ந்து மீண்டும் வொர்க் ஃப்ரம் ஹோம் முறையைப் படிப்படியாக சில அலுவலகங்கள் கடந்த ஆண்டுபோல் அமல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் பருமன் பிரச்னை மீண்டும் தலைதூக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு ஏற்ற ஜூஸ் இது. பீட்ரூட், இஞ்சியுடன் தேன் சேர்த்துக் குடிப்பதால், உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்கள் நீங்குவதோடு உடலும் புதுப்பொலிவு பெறும்.

எப்படிச் செய்வது?

இரண்டு பீட்ரூட் மற்றும் சிறு துண்டு இஞ்சியைத் தோல் சீவி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். இத்துடன், தண்ணீர்விட்டு மிக்‌ஸியில் நன்கு அரைக்கவும். இதை வடிகட்டி, தேவையான அளவு தேன் சேர்த்து அருந்தவும்.

சிறப்பு

இஞ்சி சிறிதளவு சேர்ப்பதால், உடலில் இருக்கும் தீங்கு செய்யும் பாக்டீரியாவை அகற்றும். இஞ்சியில் இருக்கும் ‘ஜிஞ்சரால்’ சத்து, செரிமான மண்டலத்தைச் சீர்செய்யும். இஞ்சி, ரத்தத்தைச் சுத்திகரிக்கும் ஆற்றல் கொண்டது. இதய நோய்கள், பக்கவாதம் போன்றவை வருவதற்கான வாய்ப்பையும் குறைக்கும்.

மூன்று வாரத்திற்கு மேல் இருமல் இருந்தால் டிபி பரிசோதனை அவசியம்! ...

5 நிமிட வாசிப்பு

மூன்று வாரத்திற்கு மேல் இருமல் இருந்தால் டிபி பரிசோதனை அவசியம்!

பெரியார் சிலை அவமதிப்பு: இருவர் மீது குண்டாஸ்!

3 நிமிட வாசிப்பு

பெரியார் சிலை அவமதிப்பு: இருவர் மீது குண்டாஸ்!

வேலைவாய்ப்பு : அஞ்சல் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அஞ்சல் துறையில் பணி!

புதன் 21 ஏப் 2021