மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 21 ஏப் 2021

கிச்சன் கீர்த்தனா: சுரைக்காய் பொரியல்

கிச்சன் கீர்த்தனா: சுரைக்காய் பொரியல்

வெள்ளரிக் குடும்பத்தைச் சேர்ந்த நீர்க்காய், சுரைக்காய். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியது. சிறுநீர் பெருக்கத்தைத் தூண்டி உடலின் வெப்பநிலையையும், பித்தத்தையும் சமநிலைப்படுத்தும் இதை ‘பித்த சமனி’ என்பர். அப்படிப்பட்ட சுரைக்காயைக்கொண்டு பொரியல் செய்வோம்; கோடையைக் குளுமையாக்குவோம்.

என்ன தேவை?

சுரைக்காய் – ஒரு கப்

வெங்காயம் – கால் கப் (பொடியாக நறுக்கவும்)

கடுகு – கால் டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – ஒன்று

கறிவேப்பிலை – சிறிதளவு

உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்

கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்

பச்சை மிளகாய் – ஒன்று

மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்

துருவிய தேங்காய் – ஒரு டேபிள்ஸ்பூன்

கொத்தமல்லி – சிறிதளவு

எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

முதலில் சுரைக்காயின் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் கடலைப் பருப்பு சேர்த்து தாளித்து, பின் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும். பின்னர் அதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு, பொன்னிறமாக வதக்கி, பின் சுரைக்காய், மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி, தண்ணீர் ஊற்றி, சுரைக்காய் நன்கு மென்மையாக வெந்து, தண்ணீர் முற்றிலும் வற்றியதும், அதில் துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லியைத் தூவி புரட்டி இறக்கினால், சுரைக்காய் பொரியல் ரெடி.

நேற்றைய ஸ்பெஷல்: சிறுதானிய சுரைக்காய் அடை

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

சமந்தாதான் விவாகரத்து கேட்டார்: நாகர்ஜுனா

4 நிமிட வாசிப்பு

சமந்தாதான் விவாகரத்து கேட்டார்:  நாகர்ஜுனா

ப்ரீபெய்ட் பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ப்ரீபெய்ட் பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!

புதன் 21 ஏப் 2021