மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 20 ஏப் 2021

கள்ளழகர் நிகழ்வுக்கு அனுமதி வழங்க நீதிமன்றம் மறுப்பு!

கள்ளழகர் நிகழ்வுக்கு அனுமதி வழங்க நீதிமன்றம் மறுப்பு!

கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வுக்கு அனுமதி தர முடியாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மீனாட்சியம்மன் திருக்கோவில் திருக்கல்யாணம், தேரோட்டம் மற்றும் கள்ளழகர் ஆற்றில் இறங்குவது உட்பட தொடர்ந்து 15 நாட்கள் இந்த திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்தாண்டும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருவதால், அனைத்து விழாக்களும் கோயில் வளாகத்திற்குள்ளே பக்தர்கள் இல்லாமல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அருண் போத்திராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்திருந்தார். அதில், “கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெறவில்லை. இந்தாண்டும் கொரோனா தொற்றை காரணம் காட்டி திருவிழாக்கள் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள், மால்கள் உள்ளிட்டவை 50% பேருடன் இயங்க அனுமதித்துள்ள நிலையில், திருவிழாக்களுக்கு முழு தடை விதிப்பது ஏற்கதக்கதல்ல. அதனால், பக்தர்கள் இன்றி, அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வை போதிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று(ஏப்ரல் 19) நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, கொரோனா பரவல் தீவிரமாக இருக்கும் இந்த சூழலில் விழாவுக்கு எப்படி அனுமதி அளித்து உத்தரவிட முடியும்? மேலும் கொரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படலாம் என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட முடியாது என திட்டவட்டமாக கூறினர். இதையடுத்து, அருண் தொடர்ந்த வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர் நீதிபதிகள்.

வினிதா

.

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

2 நிமிட வாசிப்பு

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... ...

4 நிமிட வாசிப்பு

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... எதற்காக?

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

செவ்வாய் 20 ஏப் 2021