மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 20 ஏப் 2021

தடுப்பூசி: பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு செக்!

தடுப்பூசி: பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு செக்!

சென்னை மாநகர பேருந்துகளில் பணியாற்றும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தக் கூடிய வழிகளில் முக்கியமான ஒன்று தடுப்பூசி. ஆனால், தடுப்பூசிகள் குறித்து மக்களிடம் பரப்பப்படும் தவறான தகவல்களால், அதை செலுத்திக் கொள்ள அதிகமானோர் ஆர்வம் காட்டுவதில்லை. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், குறைந்த அளவிலேயே மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர்.

இந்நிலையில், போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் இளங்கோவன் 33 பணிமனை மேலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், “மாநகர போக்குவரத்துக் கழகம் பொதுமக்களிடம் நேரிடையாக சேவை செய்யக்கூடிய மிகப் பெரிய சேவை நிறுவனமாகும். பணியின்போது ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் ஒரு நாளைக்கு சுமார் ஆயிரம் நபர்களிடம் தொடர்புகொள்ள வேண்டியுள்ளது. இதன்மூலம், கொரோனா தொற்று ஏற்படுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளது. அதனால், சென்னை மாநகர பேருந்துகளில் பணியாற்றும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அல்லது கிளை மேலாளர்கள் 45 வயதுக்கு மேற்பட்ட பணியாளர்களுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி, அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பூசி எடுத்துக் கொள்ளாமல் கொரோனா தொற்று ஏற்படுமாயின், சிறப்பு விடுப்பு வழங்கிட இயலாத சூழ்நிலை இருப்பதால், பணியாளர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினிதா

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

செவ்வாய் 20 ஏப் 2021