மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 20 ஏப் 2021

மீன்பிடி படகில் 3,000 கோடி ரூபாய் போதைப்பொருள்!

மீன்பிடி படகில் 3,000 கோடி ரூபாய் போதைப்பொருள்!

அரபிக்கடலில் சந்தேகத்துக்குரிய வகையில் சென்ற படகைப் பிடித்து சோதனை செய்ததில் 300 கிலோ அளவிலான போதைப்பொருட்கள் சிக்கியுள்ளது.

அரபிக்கடலில் இந்திய கப்பற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் சுவர்னா கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் மீன்பிடி படகு அங்குமிங்குமாகச் சென்றுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த கப்பற்படை வீரர்கள் அந்தப் படகை மடக்கி சோதனை செய்தனர். அப்போது படகில் 300 கிலோ அளவில் போதைப்பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

இதனால் படகில் உள்ளவர்களை கொச்சி துறைமுகத்துக்கு கைது செய்து கொண்டு வந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் சர்வதேச மார்க்கெட் விலையில் சுமார் 3,000 கோடி ரூபாய் என இந்தியக் கப்பற்படை தெரிவித்துள்ளது.

மேலும், “இது ஒரு முக்கிய நடவடிக்கையாகும், போதைப் பழக்கத்தால் மனிதர்களுக்கு ஏற்படும் தீங்கு தவிர, போதைப்பொருள் வர்த்தகம் பயங்கரவாதம், மதவெறி மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு நிதியளிக்கிறது” என்று கப்பற்படை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

ஆனால், “போதைப் பொருட்கள் எங்கிருந்து வந்தது? எங்குக்கொண்டு செல்லப்படுகிறது? படகில் உள்ளவர்கள் யார்?” போன்ற விவரங்களைத் தெரிவிக்கவில்லை. “அதற்கான விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது” என்று கூறியுள்ளார்.

-ராஜ்

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

செவ்வாய் 20 ஏப் 2021