மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 20 ஏப் 2021

வேலூரில் 7 பேர் உயிரிழப்பு: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

வேலூரில் 7 பேர் உயிரிழப்பு: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

வேலூரில் நேற்று 7 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு மருத்துவமனை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

வேலூர் அடுக்கம்பாறையில் அமைந்திருக்கும் அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த நான்கு பேரும், பொது வார்டில் சிகிச்சை பெற்று வந்த மூன்று பேரும் மொத்தம் ஏழு பேரும் நேற்று(ஏப்ரல் 19) ஒரே நாளில் உயிரிழந்தனர். ஆக்சிஜன் பற்றாக்குறையால்தான் இவர்கள் உயிரிழந்தனர் என அவர்களது உறவினர்கள் புகார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கூறுகையில், “கொரோனா தொற்று, சிறுநீரக கோளாறு உள்ளிட்ட காரணங்களால்தான் அவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆக்சிஜன் பற்றாக்குறைக்கும் அவர்களின் உயிரிழப்புக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. மருத்துவமனையில் மொத்தம் 370 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா நோயாளிகள் 59 பேர் உட்பட 121 பேர் ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இருப்பினும், உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினர் எழுப்பிய குற்றச்சாட்டுகள் குறித்தும், உயிரிழப்பு குறித்தும் உரிய விசாரணை நடத்தப்படும்” என தெரிவித்தார்.

இதுகுறித்து தமிழக மருத்துவக் கல்லூரி இயக்குநர் நாராயண பாபு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்ததற்கான காரணம், நோயாளிகளின் விவரம், அளிக்கப்பட்ட சிகிச்சை உள்ளிட்டவை குறித்து மருத்துவமனை நிர்வாகம் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

வினிதா

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

செவ்வாய் 20 ஏப் 2021