மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 20 ஏப் 2021

இனி நடைமேடை டிக்கெட் கிடையாது!

இனி நடைமேடை டிக்கெட் கிடையாது!

கொரோனா காரணமாக சென்னையின் முக்கிய ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் விற்பனை செய்யப்படாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் தொற்று வேகமாக பரவி வருகிறது. சென்னையில் நேற்று மட்டும் 3347 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இரவு நேர ஊடரங்கு காரணமாக இரவு நேரங்களில் ரயில்களை தவிர அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தெற்கு ரயில்வே சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர், அரக்கோணம், காட்பாடி, தாம்பரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் பயணிகளை தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை. ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் நடவடிக்கையாக இனி நடைமேடை டிக்கெட் வழங்கப்படாது. ஆனால், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுடன் வரும் ஒருவருக்கு மட்டுமே நடைமேடை டிக்கெட் வழங்கப்படும். பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஏற்கனவே ரயில் நிலையங்களில் கூட்டங்களை தவிர்ப்பதற்காக நடைமேடை டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், நடைமேடை டிக்கெட் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதுபோன்று டெல்லியிலும் ஆறு நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய தலைநகரில் உள்ள அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் நடைமேடை டிக்கெட் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வினிதா

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

சமந்தாதான் விவாகரத்து கேட்டார்: நாகர்ஜுனா

4 நிமிட வாசிப்பு

சமந்தாதான் விவாகரத்து கேட்டார்:  நாகர்ஜுனா

ப்ரீபெய்ட் பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ப்ரீபெய்ட் பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!

செவ்வாய் 20 ஏப் 2021