மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 20 ஏப் 2021

இனி 18 வயது மேற்பட்டோருக்கும் தடுப்பூசி!

இனி 18 வயது மேற்பட்டோருக்கும் தடுப்பூசி!

வருகிற மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்தியாவில் தொடர்ந்து 5வது நாளாக நேற்றும் தினசரி பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியது. நேற்று ஒரேநாளில் நாடு முழுவதும் 2 லட்சத்து 73 ஆயிரத்து 810 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,619 பேர் பலியாகி உள்ளனர். அதேசமயம், மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட தொற்று அதிகமுள்ள மாநிலங்களில் மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பிவிட்டன.படுக்கை வசதி, ரெம்டெசிவர் மருந்து, ஆக்சிஜன், வென்டிலேட்டர் ஆகியவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அதை சமாளிக்க முடியாமல் மாநில அரசுகள் திணறி வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா பரவலை தடுப்பது குறித்து நேற்று காலை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் மாலை 4.30 மணியளவில், பிரபல மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, மாலை 6.30 மணி அளவில் தடுப்பூசி உற்பத்தி அதிகரிப்பது, ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வழிமுறை குறித்து பிரபல மருந்து நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தினார். இவ்வாறு தொடர்ச்சியாக நடத்தப்பட்ட ஆலோசனைகளுக்கு பிறகு மத்திய அரசு சில முடிவுகளை எடுத்துள்ளது.

அதில், தடுப்பூசி குறித்து தவறாக பரப்பப்படும் தகவல்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, தடுப்பூசி மீது மக்களுக்கு நம்பிக்கை வரவைக்க வேண்டும் என மருத்துவர்களுக்கு வலியுறுத்தப்பட்டது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வருகிற மே1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மருந்து கடைகளிலும் கொரோனா தடுப்பூசியை விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மருந்து நிறுவனங்கள், உற்பத்தி செய்யப்படும் மருந்துகளில் 50 சதவிகிதத்தை மத்திய அரசுக்கும், மீதமுள்ள 50 சதவிகித தடுப்பூசியை மாநிலங்களுக்கும், பொதுசந்தை விற்பனைக்கும் அளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிகளை மருந்து நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக வாங்கிக் கொள்ள மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.

கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு தங்களின் பங்கிலிருந்து தடுப்பூசிகளை வழங்கவுள்ளது. தடுப்பூசியை விரயமாக்கும் மாநிலங்களுக்கு தடுப்பூசியின் எண்ணிக்கை குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிற சூழ்நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டது. இதனால், அதிகமானோர் தடுப்பூசி செலுத்த வரும்போது, அரசு எப்படி சமாளிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வினிதா

மூன்று வாரத்திற்கு மேல் இருமல் இருந்தால் டிபி பரிசோதனை அவசியம்! ...

5 நிமிட வாசிப்பு

மூன்று வாரத்திற்கு மேல் இருமல் இருந்தால் டிபி பரிசோதனை அவசியம்!

பெரியார் சிலை அவமதிப்பு: இருவர் மீது குண்டாஸ்!

3 நிமிட வாசிப்பு

பெரியார் சிலை அவமதிப்பு: இருவர் மீது குண்டாஸ்!

வேலைவாய்ப்பு : அஞ்சல் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அஞ்சல் துறையில் பணி!

செவ்வாய் 20 ஏப் 2021