மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 20 ஏப் 2021

மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

இரவு நேர ஊரடங்கின் காரணமாக, இன்று முதல் காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், இன்று முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும், ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ இரவு நேர ஊரடங்கு காரணமாக, இரவு 11 மணி வரை இயக்கப்பட்டு வந்த மெட்ரோ ரயில், இன்று முதல் காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே இயக்கப்படும். திங்கள் முதல் சனிக்கிழமை வரை மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

கூட்டம் அதிகமாக உள்ள நேரங்களில் 5 நிமிடங்களுக்கு ஒருமுறையும், கூட்டம் குறைவாக உள்ள நேரங்களில் 10 நிமிடங்களுக்கு ஒருமுறையும் ரயில்கள் இயக்கப்படும்.

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம், விமான நிலைய ரயில் முனையம், விம்கோ நகர் ரயில் முனையம் உள்ளிட்ட இடங்களில் இருந்து கடைசி மெட்ரோ ரயில் இரவு 8:55க்கும் 9:05 மணிக்கும் இடையே புறப்பட்டு 9.50 மணிக்கு சென்றடையும். இதுவே கடைசி ரயிலாகும்.

மெட்ரோ ரயிலிலும், வளாகத்திற்குள்ளும் பயணிகள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினிதா

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்? ...

3 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்?

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

4 நிமிட வாசிப்பு

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

செவ்வாய் 20 ஏப் 2021