மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 18 ஏப் 2021

கும்பமேளா: சாதுக்களின் எண்ணிக்கை குறைப்பு!

கும்பமேளா: சாதுக்களின் எண்ணிக்கை குறைப்பு!

உத்தரகாண்ட் ஹரித்வாரில் நடைபெற்று வரும் கும்பமேளாவை பெயரளவுக்கு நடத்தி முடிக்க வேண்டும் என பிரதமர் மோடி கோரிக்கை விடுத்ததையடுத்து, புனித நீராடல் நிகழ்வில் இரண்டு சாதுக்கள் அமைப்பு மட்டும் கலந்து கொண்டு முடித்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா அதிகரித்து வரும் சூழலில் கும்பமேளாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும், சாதுக்களும் புனித நீராடல் நிகழ்வில் கலந்து கொண்டதால், அங்குள்ளவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவது அதிகரித்துள்ளது. இதுவரை 54 சாதுக்கள் மற்றும் 2,171 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் ஹரித்வார், கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறி வருகிறது.

மத்தியப் பிரதேச மகா நிர்வானி அகாராவின் தலைவர் கபில் தேவ், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து, 13 அகாதாக்களில் ஒன்றான நிரஞ்சனி அகாதா கும்பமேளாவை முடித்துக் கொள்வதாக அறிவித்தது.

இதையடுத்து நேற்று பிரதமர் மோடி, கும்பமேளாவை தலைமையேற்று நடத்தி வரும் சுவாமி அவ்தேஷானந்த்துடன் தொலைபேசியில் பேசினார். அப்போது, கொரோனா அதிகமாக பரவி வரும் இந்த சூழலில், கும்பமேளாவை அதிகளவில் பக்தர்கள் இல்லாமல் பெயரளவுக்கு நடத்துவதே சரியாக இருக்கும்,’ என வேண்டுகோள் விடுத்தார்.

இதை ஏற்றுக் கொண்ட ஜூனா அகாதாவும் கும்பமேளா விழாவை முடித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஜூனா அகாதாவின் செய்தித் தொடர்பாளர் மகாந்த் நாராயண் கிரி கூறுகையில்,” இன்று ஜூனா அகாதா அலுவலக பொறுப்பாளர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில், ஜூனா அகாதா கும்பமேளாவை முடித்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வந்த சாதுக்கள் உடனடியாக அவரவர் இடத்துக்கு திரும்ப வேண்டும். ஏப்ரல் 27 அன்று நடைபெறும் புனித நீராடல் நிகழ்வில் இரண்டு சாதுக்கள் அமைப்பிலிருந்து மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். அதனால், பக்தர்கள் அதிகளவில் கலந்து கொள்ள வேண்டாம் “ எனதெரிவித்துள்ளார்.

இதனால், 27ஆம் தேதி நடைபெறுகிற புனித நீராடலில் குறைந்தளவில் சாதுக்கள் பங்கேற்று கும்பமேளா விழா முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கும்பமேளாவுக்கு சென்று வருபவர்கள் நேரடியாக ஊருக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்றும் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார். பரிசோதனையில் தொற்று உறுதி செய்பவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

ஞாயிறு 18 ஏப் 2021