மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 17 ஏப் 2021

‘அற்புதமான மனிதர்’: சத்குரு இரங்கல்!

‘அற்புதமான மனிதர்’: சத்குரு இரங்கல்!

நடிகர் விவேக் மறைவுக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு இரங்கல் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் கனவை நனவாக்கும் வகையில் ‘க்ரீன் கலாம்’ என்ற அமைப்பின் மூலம் 1 கோடி மரக்கன்றுகளை நடுவதை இலக்காகக் கொண்டு அதைத் தீவிரமாகச் செய்து வந்தவர் நடிகர் விவேக். திரைத்துறையையும் தாண்டி சமூக மற்றும் இயற்கை நலனில் ஆர்வம் காட்டியவர். இந்நிலையில் உடல் நலக் குறைவு காரணமாக இன்று காலமானார்.

அவரது மறைவுக்குச் சத்குரு தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “விவேக் - தனது கலையில் ஜாம்பவானாகத் திகழ்ந்து, கோடிக்கணக்கான மக்களை மகிழ்வித்தவர். தமிழ்நாட்டின் மாபெரும் மரங்கள் நடும் திட்டத்தைத் துவக்கியதற்கும் என்றும் நம் நினைவில் நிற்பார் - அவர் இதயம் இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் துடித்தது. என் ஆழ்ந்த இரங்கல்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆசிகள்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஈஷா அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “நடிகர் விவேக் - ஒரு மகத்தான நடிகர், மக்கள் நலனுக்கு உழைத்தவர், மரங்கள் நடும் சமூக ஆர்வலர், அற்புதமான மனிதர் - அவர் மரணம் மிகுந்த வருத்தமளிக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விவேக் ஈஷா பசுமை கரங்கள் திட்டத்திற்கு ஆரம்பக் காலம் முதல் தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தார். மேலும், காவேரி கூக்குரல் இயக்கத்திற்கும் தனது ஆதரவை வழங்கியிருக்கிறார் . அவர் ஈஷாவின் பல்வேறு நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டு மக்களிடம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

வேலைவாய்ப்பு : மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு :  மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

சனி 17 ஏப் 2021